Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அகமதாபாத் விமான விபத்து.. அடையாளம் காணப்பட்ட முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல்!

Ahmedabad Flight Crash : அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி மூலம்  விஜய் ரூபானியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதி செய்தார். மேலும், இதுவரை 33 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் விமான விபத்து.. அடையாளம் காணப்பட்ட முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல்!
முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 15 Jun 2025 14:45 PM

குஜராத், ஜூன் 15 : குஜராத் மாநிலம் அகமதாபாத்  விமான விபத்தில் (Ahmedabad Flight Crash) உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் (vijay Rupani) உடல் அடையாளம் காணப்பட்டது.  உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி மூலம்  விஜய் ரூபானியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அகமதாபாத் கோர விபத்தில்  விமானத்தில் பயணித்த  விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். 2025 ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம் விபத்துக்குள்ளானது.  2025 ஜூன் 12ஆம் தேதி மதியம் 1.38 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தின்போது, 230 பயணிகள், இரு பைலட்டுகள் என 242 பேர் இருந்துள்ளனர். விமானம் ஓடு பாதையில் இருந்து மேலே சென்ற விமானம், திடீரென தடம் மாறி கீழே விழுந்துள்ளது.

அகமதாபாத் விமான விபத்து

அருகில் இருந்த மருத்துவ கல்லூரி மீது விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தல் ஒருவர் மட்டுமே அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினர். மற்ற 241 பேரும் விமான விபத்தில் சிக்கி தீயில் கருகி உயிரிழந்தனர். அதே நேரத்தில், மதிய உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உணவு அறையில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழந்தனர்.

இவர்களின் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்துள்ளார். விஜய் ரூபானி முதலில் 2025 மே 19 அன்று லண்டனுக்குப் பயணிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த பயண டிக்கெட் ரத்து செய்யப்ட்டதால், 2025 ஜூன் 5 ஆம் தேதிக்கு மீண்டும் லண்டன் செல்ல திட்டமிட்டார்.

ஆனால் பின்னர் அதையும் ரத்து செய்தார். இறுதியாக, 2025 ஜூன் 12ஆம் தேதி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் சென்றார். தன்னுடைய மகனை பார்ப்பதற்கா அவர் லண்டன் செல்ல இருந்தார். அப்போது, விமான விபத்தில் விஜய் ரூபானி உயிரிழந்தார்.

அடையாளம் காணப்பட்ட முன்னாள் முதல்வரின் உடல்

இந்த நிலையில், விஜய் ரூபானியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக   குஜராத் உள்துறை அமைச்சர்  ஹர்ஷ் சங்கவி கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”குஜராத் முழுவதும் பொது சேவைக்காக தனது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியை அர்ப்பணித்த எங்கள் தலைவர். அகமதாபாத் செல்லும் ஏர் இந்தியா விமான விபத்தில் துரதிர்ஷ்டவசமாக காலமானார்.

இன்று காலை 11:10 மணியளவில் அவரது டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது. குடும்பத்தினர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பிறகு, இறுதிச் சடங்குகளுக்கான நேரம் மதியம் 1 மணிக்கு முடிவு செய்யப்படும்” என்றார். மேலும், மற்ற உடல்களையும் அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்த 241 பேர்களில் 33 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.