Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

3 நாட்கள் சுற்றுப்பயணம்.. வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி.. திட்டம் என்ன?

PM Modi 3 Nation Tour : அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்கிறார். 2025 ஜூன் 15ஆம் தேதியான இன்று முதல் கனடா, குரோஷியா, சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். ஆபரேஷன் சிந்தூருக்கு பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.

3 நாட்கள் சுற்றுப்பயணம்.. வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி.. திட்டம் என்ன?
பிரதமர் மோடி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 15 Jun 2025 07:58 AM

டெல்லி, ஜூன் 15 : அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி (PM Modi) கனடா, குரோஷியா, சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் (PM Modi 3 Nation Tour) மேற்கொள்கிறார். 2025 ஜூன் 15ஆம் தேதியான இன்று புறப்படும் பிரதமர் மோடி, 2025 ஜூன் 18ஆம் தேதி னது பயணத்தை நிறைவு செய்கிறார்.  ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, பிரதமர் மோடி  முதல்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். இது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கனடாவில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டிற்கு (Canada G7 Summit) பிரதமர் மோடி கலந்து கொள்வார்கள். அதோடு, சைப்ரஸ் மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் மோடி, இருநாடுகளுடனான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவார்.

மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

2025 ஜூன் 15ஆம் தேதியான இன்று சைப்ரஸுக்கு செல்கிறார். ஆபேரஷன் சிந்தூருக்கு பிறகு முதல்முறையாக 2025 ஜூன் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மூன்று வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிற்ர். முதல்கட்டமாக 2025 ஜூன் 15ஆம் தேதியான இன்று சைப்ரஸுக்கு செல்கிறார்.

அங்கு இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில், சைப்ரஸ் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். சைப்ரஸ் பயணத்தை நிறைவு செய்த பிறகு, அவர் கனடா செல்கிறார். 2025 ஜூன் 16,17ஆம் தேதிகளில் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.

ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கிறது. இந்த அமைப்பின் 51வது உச்சி மாநாடு கனனாஸ்கில் பகுதியில் 2025 ஜூன் 16,17ஆம் தேதிகளில் நடக்கிறது.

பயண திட்டம் என்ன?


இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா, உக்ரைன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுககு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், பிரதமர் மோடி அதில் கலந்து கொள்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “கனடா பிரதமர் மார்க் கார்னி தொலைபேசியில் பேசினார். ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்தார்.

கனடாவும் இந்தியாவும் மிகப் பெரிய ஜனநாயக நாடுகள். இரு நாடுகளின் மக்கள் இடையே ஆழமான உறவு நீடிக்கிறது. கனடாவும் இந்தியாவும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஜி7 உச்சி மாநாட்டில் மார்க் கார்னியை சந்தித்த காத்திருக்கிறேன்” என பதிவிட்டு இருந்தார்.

அதைத் தொடர்ந்து, 2025 ஜூன் 18ஆம் தேதி குரேஷியாவுக்கு செல்கிறார். அங்கு இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில், குரேஷியா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் பிரதமர் மோடி. குரேஷியா பயணத்தை முடித்துக் கொண்டு 2025 ஜூன் 18ஆம் தேதி இந்தியா திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.