AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அகமதாபாத் விமான விபத்து.. பிரதமர் மோடி நேரில் ஆய்வு.. அதிகாரிகளுடன் ஆலோசனை!

PM Modi Visit Ahmedabad : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக, அகமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் விபத்து குறித்து கேட்டறிந்ததாக தெரிகிறது. மேலும், விமான விபத்தில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நபரை பிரதமர் மோடி நேரில் சந்திக்கிறார்.

அகமதாபாத் விமான விபத்து.. பிரதமர் மோடி நேரில் ஆய்வு.. அதிகாரிகளுடன் ஆலோசனை!
பிரதமர் மோடிImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 13 Jun 2025 13:05 PM IST

குஜராத், ஜூன் 13 : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான (Ahmedabad Flight Crash) விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி  (PM Modi) நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக, அகமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் விபத்து குறித்து கேட்டறிந்ததாக தெரிகிறது. மேலும், விமான விபத்தில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நபரை பிரதமர் மோடி நேரில் சந்திக்கிறார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் 2025 ஜூன் 12ஆம் தேதியான நேற்று மதியம் 1.30 மணியளவில் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்து ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அகமதாபாத் விமான விபத்து

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில், ஒருவர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். 169 இந்தியர்களும், 52 பிரிட்டனையும், 7 பேர் போர்ச்சுகலையும், ஒருவர் கனடா நாட்டையும் சேர்ந்தவர்கள் உயரிழந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு  பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

டாடா குழுமம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி தருவதாக அறிவித்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி 2025 ஜூன் 13ஆம் தேதியான இன்று காலை அகமதாபாத்துக்கு  சென்றுள்ளார். அங்கு விமான விபத்து நடந்தை ஆய்வு செய்துள்ளார். அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் இருந்தார்.

பிரதமர் மோடி நேரில் ஆய்வு

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரட்டனைச் சேர்ந்த ஒருவரை நேரில் சென்று பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.  மேலும், விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து  அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். முன்னதாக, இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை உடைக்கிறது.

இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விபத்து நடந்தை பார்வையிட்டு, சிகிச்சை பெற்று வரும் நபரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us