AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Pune : புனே பாலம் விபத்து.. 4 பேர் பலியான நிலையில், 51 பேருக்கு சிகிச்சை!

Pune Bridge Collapse | புனேவின் மாவல் தாலுகாவில் குண்ட்மாலா என்ற சுற்றுலா தளம் ஒன்று உள்ளது. நேற்று (ஜும் 15, 2025) அங்கிருந்த பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த நிலையில், பாலத்தின் மீது நின்றுக்கொண்டு இருந்தவர்கள் மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Pune : புனே பாலம் விபத்து.. 4 பேர் பலியான நிலையில், 51 பேருக்கு சிகிச்சை!
புனே பாலம் விபத்து
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Jun 2025 08:25 AM IST

புனே, ஜூன் 16 : புனேவில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலம் திடீரென இடிந்து விழுந்த நிலையில், சுற்றுலா பயணிகள் சிலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதன் காரணமாக மாயமான சுற்றுலா பயணிகள் தேடப்பட்டு வந்த நிலையில், 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள 51 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புனே பாலம் விபத்தின் மீட்பு பணிகள் மற்றும் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான இரும்பு பாலம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் மாவல் தாலுகாவில் குண்ட்மாலா என்ற சுற்றுலா தளம் ஒன்று உள்ளது. நேற்று (ஜூன் 15, 2025) இந்திராணி ஆற்றில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலம் திடீரென இடிந்து விழுந்த விபத்துக்குள்ளானதில், பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் அடுத்து செல்லப்பட்டனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் காவல்துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டவர் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், தீவிர மீட்பு பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

4 பேர் உயிரிழந்த நிலையில் 51 பேருக்கு சிகிச்சை

இந்த பாலம் விபத்தில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியில் 250 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 51 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 6 பேரி  உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஆற்ரின் நீரோட்டத்தை காண ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் பாலத்தின் மீது குவிந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பால விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us