Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மை டி.வி.கே செயலி.. 20,000 வாக்குச்சாவடி முகவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை பயிற்சி..

TVK Party - My TVK App: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக வெற்றி கழகம் தரப்பில் மை டிவிகே செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகளை மேற்கொள்ள முதல் கட்டமாக 54 தொகுதிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

மை டி.வி.கே செயலி.. 20,000 வாக்குச்சாவடி முகவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை பயிற்சி..
பயிற்சி முகாம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Aug 2025 08:06 AM

சென்னை, ஆகஸ்ட் 4, 2025: தமிழக வெற்றிக்கழகம் சார்பாக மை டிவிகே செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகளை மேற்கொள்ள முதல் கட்டமாக 54 தொகுதிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்கு தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரதான கட்சிகளான அதிமுக, திமுக மக்களை சந்தித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் பாமக மற்றும் தேமுதிக தரப்பிலும் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு மக்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.

உறுப்பினர் சேர்க்கைக்கான மை டிவிகே செயலி:

தமிழகத்தை பொறுத்தவரையில் நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் 2025 ஜூலை 30ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டு அதில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க: தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகள்.. பொதுக்கூட்டங்கள் நடத்த ஓ. பன்னீர்செல்வம் திட்டம்..

மை டிவிகே என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த செயலின் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினராவது சேர்க்க வேண்டும் என தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். அதற்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி:


இதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் உத்தரவுபடி செயலியை பயன்படுத்துவது தொடர்பாகவும், அதன் மூலம் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும், மாவட்ட செயலாளர்களுக்கும் பயிற்சி பெற்ற தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: ’நான் மானஸ்தன்’ அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

அதனை தொடர்ந்து முதல் கட்டமாக சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர், வேளச்சேரி, காஞ்சிபுரம் மாவட்ட உட்பட 54 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் 15 ஆயிரத்து 652 வாக்குச்சாவடிகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர் அணி சேர்க்கை நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.