AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படவுள்ளதா? நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய தகவல்

Banking Reforms Update: பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உயர் மட்ட குழுவின் பணியை அந்த ஒரு விஷயத்துக்குள் மட்டுமே சுருக்கிவிட கூடாது என்றார். வங்கிகளின் இணைப்பு குறித்து அவர் உறுதியாக மறுப்பு தெரிவிக்கவில்லை.

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படவுள்ளதா? நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய தகவல்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Feb 2026 20:18 PM IST

இந்திய வங்கிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, விரைவில் ஒரு உயர் மட்ட குழு அமைக்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இந்த குழு முன்னேறிய இந்தியா என்ற இலக்கை அடைய தேவையான நிதி ஆதாரங்களை வங்கிகள் எவ்வாறு வழங்க வேண்டும் என்பதை விரிவாக ஆய்வு செய்யும் என்று அவர் கூறினார். இந்த குழுவின் முக்கிய நோக்கம், இந்திய வங்கிகளை உலக அளவில் போட்டியிடக் கூடிய பெரிய நிதி நிறுவனங்களாக மாற்றுவது தான் என்றார். மேலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்குத் தேவையான முதலீடு, கடன் மற்றும் நிதி ஆதரவை உறுதி செய்வது தான் இதன் முக்கிய நோக்கம் என்றார்.

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுமா?

முன்னேறிய இந்தியா என்ற இலக்கை அடைய பொருளாதார தன்னிறைவு அவசியம். பொதுமக்களிடம், தொழில்துறையினர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் நிதியை வழங்க வங்கிகள் தயாராக இருக்க வேண்டும் என்றார். பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர், உயர் மட்ட குழுவின் பணியை அந்த ஒரு விஷயத்துக்குள் மட்டுமே சுருக்கிவிட கூடாது என்றார்.

இதையும் படிக்க : Gold Price : அதிரடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி.. நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள்!

வங்கிகளின் செயல்பாடு வளர்ச்சியடைய வேண்டும் என்பதன் பொருள், வெறும் இணைப்புகள் அல்ல. மாறாக, நாட்டின் வளர்ச்சியை பொருளாதார ரீதியாக தாங்கும் திறன் கொண்டதாக வங்கிகள் இருக்க வேண்டும் என்பது தான் என்றார். பொதுமக்களிடம் வங்கி சேவைகள் எளிதாகச் செல்வதே முக்கிய இலக்கு என்றும் அவர் கூறினார்.

இந்த உயர்மட்ட குழு அமைப்பதற்கான காலக்கெடு குறித்து பேசிய நிதியமைச்சர், அரசு மிக விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்றார். இந்த திட்டம், கடந்த 2026, பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தனது பட்ஜெட் உரையில், முன்னேறிய இந்தியா என்ற நிலைய அடைய, வங்கிகளை முழுமையாக ஆய்வு செய்து, நிதி நிலைத்தன்மை மற்றும் வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு? ஊழியர்கள் அதிர்ச்சி!

உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்படவுள்ள நிலையில், வரும் நாட்களில் வங்கிகளின் செயல்பாடுகளில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.  குறிப்பாக வங்கிகளின் இணைப்பு குறித்து அவர் உறுதியாக தெரிவிக்காத நிலையில் அது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us