Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தால் ரூ.25,000.. ஆனால் ஒரு கண்டிஷன்.. ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு!

RBI Announcement On Digital Scam Money Lost | இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். இந்த நிலையில், டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தால் ரூ.25,000.. ஆனால் ஒரு கண்டிஷன்.. ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Feb 2026 13:20 PM IST

தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் அதே சூழலில் தொழில்நுட்பம் தொடர்பான மோசடி மற்றும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் (Digital Money Transaction) அதிகமகாக உள்ளன. யுபிஐ (UPI – Unified Payment Interface), கிரெடிட் கார்டு (Credit Card), டெபிட் கார்டு (Debit Card), நெட் பேங்கிங் (Net Banking) உள்ளிட்ட பல வகையான பேமெண்ட் முறைகள் பயன்பாட்டில் உள்ளன. இவை பொதுமக்களின் பண பரிவர்த்தனைகளை விரைவானதாகவும், எளிதானதாகவும் மாற்றும் நிலையில், அவற்றில் சில சிக்கல்களும் உள்ளன.

ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மையப்படுத்தி நடைபெறும் மோசடிகள்

ஆப்லைன் பண பரிவர்த்தனைகளை மையப்படுத்தி நடைபெறும் மோசடி சம்பவங்கள் தொடர்பான எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலி குறுஞ்செய்தி, ஓடிபி, லிங்குகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களை வலையில் சிக்க வைத்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்றுக்கொண்டு மோசடி செய்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் சமீப காலமாக டிஜிட்டல் கைது மோசடி அதிகரித்து வருகிறது. இவ்வாறு டிஜிட்டல் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய (RBI – Reserve Bank of India) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : 2026-ல் தங்கம், வெள்ளி, காப்பர் உச்சத்தை தொடும்.. பாபா வங்கா கணிப்பு!

டிஜிட்டல் மோசடிகளில் சிக்கி பணத்தை இழந்தால் ரூ.25,000

இவ்வாறு ஏராளமான பொதுமக்கள் டிஜிட்டல் மோசடிகளில் தங்களது பணத்தை இழந்து வரும் நிலையில், டிஜிட்டல் மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்கும் நபர்களுக்கு வங்கி மூலம் ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பான விரிவான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாடுகளில் இருந்து தங்கம் எடுத்து வருவதற்கான விதிகளில் மாற்றம்.. பிப்ரவரி 2 முதல் அமல்!

இந்த திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு மொத்த இழப்புத் தொகையின் 85 சதவீதம் வரை வழங்கப்படும். ஆனால், திருப்பி வழங்கப்படும் அதிகபட்ச தொகை ரூ.25,000 ஆக மட்டுமே இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதாவது மொத்த இழப்பு எவ்வளவாக இருந்தாலும், அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே வழங்கப்படும். மேலும், இந்த இழப்பீடு ஒரு நபருக்கு அவரது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் வகையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.