வாரத்தின் முதல் நாளே கடுமையாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்தே காணப்படுகிறது. அந்த வகையில், பிப்ரவரி 9, 2026 தேதியான இன்று, வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூபாய் 15 உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில், ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 300 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 3,00,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை, பிப்ரவரி 9, 2026: கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், இன்று மீண்டும் கடுமையான உயர்வை சந்தித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூபாய் 230 உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 14,650 ஆகவும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 1,17,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூபாய் 15,982 ஆகவும், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூபாய் 1,27,856 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, தங்கம் ஒரு சவரனுக்கு ரூபாய் 1,840 உயர்ந்துள்ளது. இது நடுத்தர மக்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து உயரும் தங்கம் வெள்ளி விலை:
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்தே காணப்படுகிறது. அந்த வகையில், பிப்ரவரி 9, 2026 தேதியான இன்று, வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூபாய் 15 உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில், ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 300 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 3,00,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: இந்த 5 நாடுகளில் மிக குறைவான விலையில் தங்கம் வாங்கலாம்.. பட்டியல் இதோ!
பிப்ரவரி 7 ஆம் தேதி, ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 14,420 ஆகவும், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 1,15,360 ஆகவும் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த தங்க விலை, தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.
ஏன் இந்த விலை ஏற்றம்?
அமெரிக்கா, ஈரான் மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு கொள்கை காரணமாக புவிசார் அரசியல் பதற்றம் அதிகரித்து, தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. அதேபோல், உலக பொருளாதாரத்தில் நிலவும் சீரற்ற சூழ்நிலையின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதும் இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலை உயர்வு வரக்கூடிய நாட்களிலும் தொடரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 29 ஜனவரி 2026 | ரூ.16,800 | ரூ.1,34,400 |
| 30 ஜனவரி 2026 | ரூ.15,850 | ரூ.1,26,800 |
| 31 ஜனவரி 2026 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
| 01 பிப்ரவரி 2026 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
| 02 பிப்ரவரி 2026 | ரூ.13,950 | ரூ.1,11,600 |
| 03 பிப்ரவரி 2026 | ரூ.14,270 | ரூ.1,14,160 |
| 04 பிப்ரவரி 2026 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
| 05 பிப்ரவரி 2026 | ரூ.14,320 | ரூ.1,14,560 |
| 06 பிப்ரவரி 2026 | ரூ.14,250 | ரூ.1,14,000 |
| 07 பிப்ரவரி 2026 | ரூ.14,420 | ரூ.1,15,360 |
| 9 பிப்ரவரி 2026 | ரூ. 14,650 | ரூ. 1,17,200 |