AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அந்தமானில் பயங்கரம்.. சீறிய கடல்.. கவிழ்ந்த படகு.. குழந்தைகள் உள்பட 250 பேரின் கதி என்ன?

Boat Capsizes In Andaman Sea: அந்தமான் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அகதிகள் மற்றும் பொதுமக்கள் 250 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். இது தொடர்பாக வங்கதேச கடலோர காவல் படை அளித்த தகவலின்பேரில், தேடும் பணி நடைபெற்று வருகிறது.

அந்தமானில் பயங்கரம்.. சீறிய கடல்.. கவிழ்ந்த படகு.. குழந்தைகள் உள்பட 250 பேரின் கதி என்ன?
அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து விபத்து
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 15 Apr 2026 10:16 AM IST

அந்தமான் கடலில் ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 250 பேர் காணாமல் போய் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையம் கூறுகையில், பொதுமக்கள் சென்ற படகு தெற்கு பங்களாதேஷில் உள்ள டெக்னோபில் இருந்து புறப்பட்டு மலேசியா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, வீசிய பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் படகு தள்ளாட ஆரம்பித்தது. மேலும், படகில் அதிக அளவிலான கூட்டம் இருந்ததன் காரணமாகவும் அந்த படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சுமார் 250 பேர் காணாமல் போய் உள்ளனர். ரோஹிங்கியோவை சேர்ந்த அகதிகள் அபாயகரமான கடல் பயணங்களை மேற்கொள்ளும் பகுதியாக டெக்னாஃப் விளங்கி வருகிறது.

ஆபத்தான கடல் வழி பயணம் மேற்காெள்ளும் மக்கள்

ஒவ்வொரு ஆண்டும் மியான்மரில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினரான ரோஹிங்கியாக்கள் ஆயிரக்கணக்கானோர் அடக்குமுறை மற்றும் உள்நாட்டு போரில் இருந்து தப்பித்து பெரும்பாலும் நெரிசல் மிகுந்த மற்றும் தற்காலிகமாக தயாரிக்கப்பட்ட படகுகளின் கடல் வழியாக ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் படகில் இருந்த ரோஹிங்கியர்கள் வங்கதேசத்தின் பஜாரில் உள்ள பிரம்மாண்டமான முகாம்களை விட்டு வெளியேறி வந்துள்ளனர். அங்கு, மியான்மரின் மேற்கு மாநிலமான ரக்கைனில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் மோசமான சுகாதாரமற்ற சூழலில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க: நிலவை நோக்கிய பயணத்தில் புதிய வரலாறு.. பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஆர்டிமிஸ் 2 விண்வெளி வீரர்கள்..

ராணுவம் – இன கிளர்ச்சி குழு இடையே மோதல்

மேலும், அந்தப் பகுதியில் ராணுவத்திற்கும், இன கிளர்ச்சி குழுவான அரக்கான் ராணுவத்துக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் ரக்கைன் மாநிலத்திலேயே கடுமையான மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலைகள் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், முதல் கட்ட தகவல்களின்படி, அந்தக் கப்பல் கடந்த ஏப்ரல் 4- ஆம் தேதி வங்கதேசத்தில் இருந்து புறப்பட்டதாகவும், அதில், சுமார் 280 பேர் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. நீண்ட கால இடப்பெயர்வு மற்றும் ரோஹிங்கியாக்களுக்கான நீண்ட தீர்வுகள் கிடைக்காததன் காரணமாகவே இந்த துயர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

வங்கதேச கடலோர காவல் படை தகவல்

மியான்மரில் இடம் பெயர்வதற்கான மூல காரணங்களை களைவதற்கும், ரோஹிங்கியா அகதிகள் தாங்களாகவே முன்வந்து பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் தங்கள் இல்லங்களுக்கு திரும்புவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கு அவசரமாக தேவைப்படும் முயற்சிகளை முன்னெடுப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் சட்டோகிராமில் இருந்து இந்தோனேசியாவுக்கு சென்று கொண்டிருந்த வங்கதேச குடியேற்றப்பட்ட கப்பல் ஏப்ரல் 9- ஆம் தேதி அந்தமான் தீவு அருகே விபத்தில் சிக்கி பலர் கடலில் மிதந்து கொண்டிருப்பதாக வங்கதேச கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: உலக புகழ் பெற்ற சுற்றுலா தளத்தில் சோகம்.. கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி!

Follow Us