போதைப்பொருள் குற்றவாளியை பிடிக்க தாய்லாந்து காவலர்கள் செய்த மாஸ் சம்பவம்.. பெண் வேடமிட்டு மாஸ்டர் பிளான்!
Thailand Cops Dressed Up Like A Female Dancers | குற்றவாளிகளை பிடிப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு வேலைகளை செய்ய வேண்டியது இருக்கும். சில வழக்குகளில் காவலர்கள் இரவு, பகல் என பாராமல் உழைப்பர். அந்த வகையில், தாய்லாந்தில் குற்றவாளியை பிடிக்க காவலர்கள் பெண் நடன கலைஞர்களை போல வேடமிட்டுள்ளனர்.
தாய்லாந்து, மே 27 : தாய்லாந்தில் (Thailand) மிக முக்கிய போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியை பிடிக்க பெண் நடன கலைஞர்கள் போல வேடமிட்டு சென்றது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது. காவல் அதிகாரிகள் சிலர் குழுவாக பெண் நடன கலைஞர்களை போல வேடமிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில், இந்த சம்பவம் வெளியே வந்துள்ளது. யார் அந்த குற்றவாளி, அவரை பிடிக்க காவலர்கள் அவ்வாறு வேடமிட்டு சென்றது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
குற்றவாளியை பிடிக்க பெண் நடன கலைஞர்களை போல வேடமிட்ட காவலர்கள்
கிழக்கு தாய்லாந்தின், தா லவுங் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மன்னராக வலம் வந்த நபர் ஒருவரை காவலர்கள் கைது செய்துள்ளனர். தங்களது ரகசிய திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியதை தொடர்ந்து, அந்த காவலர்கள் தாங்கள் அணிந்திருந்த அந்த வேடத்திலேயே குற்றவாளியுடன் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படம் தான் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : நல்ல செய்தி வரப்போகுது – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சொன்ன விஷயம்!
மெத்தபெட்டமைன் மாத்திரைகள் உடன் கைது செய்யப்பட்ட மேகா
மேகா ஃபா வாப் வாப் என்ற நபர் 53 மெத்தபெட்டமைன் மாத்திரைகள், போதைப்பொருட்களை வாங்குவதற்காக சுமார் 200-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள், ஸ்மார்ட்போன் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தனது அறிக்கையில் கூறியுள்ளது. மேகா சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபடுவதை காவலர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நிலையில், வீதி திருவிழாவில் பெண் வேடமிட்டு அவரை கையும், களவுமாக பிடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : குறைகிறதா போர் பதட்டம்.. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஓகே சொன்ன ஈரான்? அடுத்து என்ன?
இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
Male Thai cops disguise themselves as sexy female dancers to catch a notorious drug dealer
The suspect was arrested with a huge stash of meth, and one unbelievably confusing last memory pic.twitter.com/9Uimz84Ivh
— RT (@RT_com) May 25, 2026
தாங்கள் திட்டமிட்டபடியே அந்த குற்றவாளியை கைது செய்த நிலையில், குற்றவாளியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர்கள் ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அது தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.