ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது மீண்டும் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் கீவ் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு சில நாட்களிலேயே இந்த புதிய மிரட்டல் வெளியாகியுள்ளது.