AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஒப்பிடப்பட்ட வெள்ளை எருமை.. பலியில் இருந்து மீட்டு புதுவாழ்வு கொடுத்த வங்காளதேச அரசு!

Bangladesh Government Rescued Albino Buffalo | வங்காளதேசத்தில் பக்ரீத் பண்டிகைக்கு பலி கொடுப்பதற்காக வெள்ளை நிற அல்பினோ எருமை மாடு ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த எருமை மாட்டை பலியில் இருந்து மீட்ட அந்த நாட்டு அரசு புது வாழ்க்கை கொடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஒப்பிடப்பட்ட வெள்ளை எருமை.. பலியில் இருந்து மீட்டு புதுவாழ்வு கொடுத்த வங்காளதேச அரசு!
அல்பினோ வெள்ளை எருமை
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 28 May 2026 20:35 PM IST

டாக்கா, மே 28 : வங்காளதேசத்தில் (Bangladesh) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தோற்றம் கொண்டு இருப்பதாக விமர்சிக்கப்பட்ட எருமை மாடு ஒன்றை வங்காளதேச அரசு பலி கொடுப்பத்தில் இருந்து மீட்டு புது வாழ்வு கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புகைப்படத்துடன் இணைத்து அந்த எருமை மாட்டின் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், அது மிகவும் வைரலானது. இந்த நிலையில் தான், வங்காளதேச அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ஒப்பிட்டு பேசப்பட்ட எருமை

வங்காளதேசத்தின் நாராயண்கஞ்ச் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில், பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி வழங்க வளர்க்கப்பட்டு வந்த அல்பினோ ரக எருமை மாட்டின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படம் வைரலாக தொடங்கியதுமே, அந்த எருமையின் தலையில் இருந்த பொன்னிற முடி, அமெரிக்க அதிபர் டிரம்பின் தலை முடியை போல இருப்பதாகவும், அந்த எருமை பார்ப்பதற்கு டிரம்பை போல இருப்பதாகவும் பரவலாக கருத்து பரவியது.

இதையும் படிங்க : பாகிஸ்தானில் ரயில் நிலையம் அருகே தற்கொலைப்படை குண்டுவெடிப்பு.. 23 பேர் பலி, 71 பேர் காயம்

எருமை மாட்டை பார்க்க குவிந்த ஏராளமான பொதுமக்கள்

டிரம்பை போல இருப்பதாக பரவலாக கூறப்பட்ட நிலையில், அந்த எருமைக்கு டிரம்ப் என பெயரும் சூட்டப்பட்டது. இந்த நிலையில் தான், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அந்த எருமை மாட்டை பார்க்க படையெடுத்துள்ளனர். இந்த நிலையில் தான், முன்பு திட்டமிட்டு வளர்க்கப்பட்டதை போலவே 700 கிலோ எடை கொண்ட அந்த எருமை மாடு, பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுக்க தயார் செய்யப்பட்ட நிலையில், அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வேகமாக பரவும் எபோலா வைரஸ்.. அவசரநிலை அறிவித்த உலக சுகாதார அமைப்பு.. எந்தெந்த நாடுகளுக்கு ஆபத்து ?

பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட எருமை

இந்த எருமையை காப்பாற்றவும் அதை விலை கொடுத்து வாங்கியவருக்கு பணத்தை திருப்பி கொடுக்கவும் வங்காளதேச உள்துறை மந்திரி சலாவுதீன் அகமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குர்பானி கொடுப்பதில் இருந்து மீட்கப்பட்ட அந்த எருமை,  டாக்காவில் உள்ள தேசிய பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த எருமை பொதுமக்கள் பார்வையிட அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow Us