காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதும், நோயாளிகள் மருத்துவமனைகளிலிருந்து தப்பித்து ஓடுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள இடுரி மாகாணத்தில் இந்த சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.