AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நொடி பொழுதில் 17 ஏக்கர் நிலப்பரப்பு காலி ஆகிவிடும்.. மிகவும் அபாயகரமான கிளஸ்டர் பாம் ஏவுகணைகளை சோதனை செய்யும் வடகொரியா!

North Korea Testing Dangerous Missile | வடகொரியா தொடர்ந்து புதிய புதிய ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கிளஸ்டர் பாம் என்ற ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இது நொடி பொழுதில் 17 ஏக்கர் பரப்பளவை சிதைக்கும் ஆற்றல் கொண்டது.

நொடி பொழுதில் 17 ஏக்கர் நிலப்பரப்பு காலி ஆகிவிடும்.. மிகவும் அபாயகரமான கிளஸ்டர் பாம் ஏவுகணைகளை சோதனை செய்யும் வடகொரியா!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 10 Apr 2026 07:43 AM IST

பியாங்யாங், ஏப்ரல் 10 : உலக நாடுகள் தங்களது பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களை சோதனை செய்து வருகின்றன. அந்த வகையில், அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து அவ்வப்போது உலக நாடுகளுக்கு வடகொரியா (North Korea) அதிர்ச்சி கொடுத்து வருகிறது. அதேபோல தற்போது கிளஸ்டர் பாம் (Cluster Bomb) பொருத்தப்பட்ட நவீன ஏவுகணைகளை சோதனை செய்து வடகொரியா அதிரடி காட்டி வருகிறது.

கொரிய தீப கற்பத்தில் பல ஆண்டுகளாக நீடிக்கும் மோதல்

கொரிய தீப கற்பத்தில் வட கொரியா, தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகள் அமைந்துள்ளன. இவை இரண்டும் அண்டை நாடுகளாக இருந்தாலும், இந்த இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் பல ஆண்டு காலமாக கடும் மோதல் நீடித்து வருகிறது. அதுமட்டுமன்றி, தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர் ஏவுகணை சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க : மேற்கு ஆசியா போர் நிறுத்தம்: ஈரான் வலியுறுத்திய 10 நிபந்தனைகள்!

நவீன சோதனைகள் மூலம் உலக நாடுகளை அதிர வைக்கும் வடகொரியா

வடகொரியா ஏற்கனவே மிக பயங்கர ஆற்றலுடன் கூடிய அணு ஆயுதங்களை வைத்துள்ள நிலையில், நவீன போர் முறைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆயுதங்களை தொடர்ச்சியாக சோதனை செய்து உலக நாடுகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தான், தற்போது மிகவும் சக்தி வாந்த கிளஸ்டர் பாம் பொருத்தப்பட்ட நவீன ஏவுகணைகளை சோதனை செய்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : போர் நிறுத்தம்.. ட்ரம்ப் சொன்ன ஹேப்பி நியூஸ்.. சரசரவென விலை குறைந்த கச்சா எண்ணெய்!

கிளஸ்டர் பாம் ஏவுகணைகள் என்றால் என்ன?

இந்த கிளஸ்டர் பாம் ஏவுகணைகள் இலக்கை சென்றடைந்தது, அதில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான குடுண்கள் சிதறி வெடிக்கும். அவ்வாறு நடக்கும்போது சுமார் 17 ஏக்கர்கள் நிலப்பரப்பை கொண்டுள்ள இடம் நொடி பொழுதில் சாம்பலாகிவிடும். ஒருசில நிமிடங்களில் ஒரு நகரத்தை அழித்துவிடும் சக்தி இந்த கிளஸ்டர் பாம்பகளுக்கு உள்ளன. இத்தகைய மிகவும் ஆபத்தாகன ஏவுகணைகளை வடகொரியா  சோதனை செய்து வருவது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us