பங்களாதேஷில் உள்ள ஒரு எருமை தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வைரலாக மாறியுள்ளது. அந்த எருமை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை போல இருப்பதாக மக்கள் கூறி வருவதுதான் அதற்கு காரணம். பங்களாதேஷின் நாராயண்கஞ்ச் பகுதியில் உள்ள பைக்பாரா பகுதியில் வளர்க்கப்படும் இந்த அரிய அல்பினோ எருமைக்கு டொனால்ட் டிரம்ப் என்று பெயர் வைத்துள்ளனர்.