AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026 Final: பைனலில் மழைக்கு வாய்ப்பு.. குஜராத் – பெங்களூரு மோதலில் யாருக்கு சாதகம்..?

RCB vs GT Final: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியின் போது மழை பெய்தால், வருகின்ற 2026 மே 31ம் தேதி போட்டியை நடத்தி முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தொடர் மழை பெய்தால், ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். மழை தொடர்ந்தால், கூடுதலாக 120 நிமிடங்கள் சேர்க்கப்படும்.

IPL 2026 Final: பைனலில் மழைக்கு வாய்ப்பு.. குஜராத் – பெங்களூரு மோதலில் யாருக்கு சாதகம்..?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 May 2026 18:56 PM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) இறுதிப் போட்டியானது, நாளை அதாவது 2026 மே 31ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. யார் சாம்பியன் என்ற முடிவை அறிந்து கொள்வதற்கு வலுவான அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத காத்திருக்கின்றன. தகுதிச்சுற்று 1-ஐ வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், குஜராத் அணி தகுதிச்சுற்று 2-ல் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தது. அதன்படி, 2 அணிகளும் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல கடுமையாக போராடும்.

ஐபிஎல் 2026 சீசனில் 10 அணிகள், 70க்கும் மேற்பட்ட போட்டிகள், 2 மாதங்களுக்கும் மேலான போராட்டத்திற்குப் பிறகு, இறுதிப் போட்டியை காண்பதற்கான நேரம் இறுதியாக வந்துவிட்டது. ஆனால், போட்டியின் போது ஸ்டேடியத்தில் மழை பெய்தால் என்ன விதிகள் பின்பற்றப்படும்? நாளை அதாவது 2026 மே 31ம் தேதி போட்டி தொடங்கவில்லை என்றால், யார் சாம்பியன் பட்டம் வெல்வார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: 5வது பைனலில் களம்.. இதுவரையிலான கோலியின் சாதனை என்ன?

மழை பெய்தால் என்ன நடக்கும்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியின் போது மழை பெய்தால், வருகின்ற 2026 மே 31ம் தேதி போட்டியை நடத்தி முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தொடர் மழை பெய்தால், ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். மழை தொடர்ந்தால், கூடுதலாக 120 நிமிடங்கள் சேர்க்கப்படும். ஒரு முடிவை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு இன்னிங்ஸிலும் குறைந்தபட்சம் 5 ஓவர்களாவது விளையாடப்படும். அப்படியும் போட்டி தொடங்கத் தவறினால், போட்டியானது இறுதிப்போட்டி நடைபெறும் நாளான 2026 மே 31ம் தேதி நடைபெறாது. அவ்வாறான நிலையில், போட்டி மாற்று நாளுக்கு மாற்றப்பட்டு வருகின்ற 2026 ஜூன் 1ம் தேதி நடைபெறும்.

ALSO READ: ஐபிஎல் 2026 சீசனில் சொதப்பல்.. அடுத்த சீசனில் இந்த 4 அணிகளின் கேப்டன்கள் வெளியேற்றமா?

ரிசர்வ் நாளில் மழை பெய்தால் போட்டி யாருக்கு சாதகம்?

மாற்று நாளான வருகின்ற 2026 ஜூன் 1ம் தேதி, மழையின் காரணமாக ஆட்டத்தைத் தொடங்க முடியாவிட்டால், அந்தப் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும். இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் 2026 சீசனின் புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தை பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும். புள்ளிகள் அட்டவணையில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்தையும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாமிடத்தையும் பிடித்தன.

Follow Us