IPL 2026: வைபவ் சூர்யவன்ஷியை திட்டினாரா ரியான் பராக்? வைரலாகும் வீடியோ.. ரசிகர்கள் ஏமாற்றம்!
Vaibhav Sooryavanshi: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 204.25 ஸ்டிரைக் ரேட்டில் 96 ரன்கள் எடுத்தார். இருப்பினும், ஆட்டமிழந்த பிறகு வைபவ் சூர்யவன்ஷி டக்அவுட்டிற்குத் திரும்பியபோது நடந்த காட்சி ரசிகர்கள் உள்பட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஐபிஎல் 2026-ன் (IPL 2026) தகுதிச்சுற்று 2-ல் குஜராத் டைட்டன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்தப் போட்டியின் போது, ரியான் பராக் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் பரவிய அந்த வீடியோவில், வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) ஆட்டமிழந்த உடனேயே எடுக்கப்பட்டது போன்று தெரிகிறது. அதில், ரியான் பராக் வைபவ் சூர்யவன்ஷியை திட்டுவது போல் தெரிகிறது. இருப்பினும், அந்த வாக்குவாதத்தின் போது ரியான் பராக், வைபவிடம் என்ன சொன்னார் என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், போட்டி முடிந்ததும், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் தனது 15 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்காக உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அதுகுறித்தும் முழுமையாக தெரிந்து கொள்வோம்.
ALSO READ: எகிறி அடித்த சூர்யவன்ஷி.. 200ஐ கடந்த ராஜஸ்தான்.. குஜராத்துக்கு 215 ரன்கள் இலக்கு!




வைபவ் சூர்யவன்ஷி பற்றி ரியான் பராக் என்ன சொன்னார்?
Chin up, Vaibhav Sooryavanshi! 🩷
You have so much to be proud of 🥹
Scorecard ▶️ https://t.co/eupS8cBPc2#TATAIPL | #Qualifier2 | #TheFinalLeap | #GTvRR | @rajasthanroyals pic.twitter.com/8lHU927KLE
— IndianPremierLeague (@IPL) May 29, 2026
போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவின் போது, ரியான் பராக் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து பேசியதாவது, “நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் வைபவ் செய்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. களத்தில் இறங்கி கண்மூடித்தனமாக பேட்டிங்கை சுழற்றி நிறைய ரன்கள் எடுத்தார். ஆனால் வைபவ் சூர்யவன்ஷி பேட் செய்த விதத்தில், அவர் பார்க்காமலோ அல்லது சிந்திக்காமலோ பேட்டிங்கை சுழற்றியதுபோல் தெரியவில்லை. மாறாக, ராஜஸ்தான் அணியின் தேவைகளை மனதில் கொண்டு, சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடினார். அணி வெற்றி பெற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். அது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. எதிர்காலத்திலும் வைபவ் சூர்யவன்ஷி இதுபோலவே தொடர்ந்து விளையாடுவார் என்று நம்புகிறேன்” என்றார்.
ரியான் பராக் எப்போது வைபவ் சூர்யவன்ஷியை திட்டினார்?
This is heartbreaking to watch. Vaibhav Sooryavanshi gave his all to take Rajasthan to this level, and this is how the captain treats him? Pure arrogance from Riyan Parag. ❌
Vaibhav, please leave RR. Move to RCB where the culture is supportive and players actually get the… pic.twitter.com/pYbBtyO032— Rahul Gupta (@R_astro_market) May 30, 2026
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 204.25 ஸ்டிரைக் ரேட்டில் 96 ரன்கள் எடுத்தார். இருப்பினும், ஆட்டமிழந்த பிறகு வைபவ் சூர்யவன்ஷி டக்அவுட்டிற்குத் திரும்பியபோது நடந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வைரலான அந்த வீடியோவில், ஆட்டத்திற்குப் பிறகு வைபவைப் பாராட்டிக்கொண்டிருந்த ரியான் பராக், பின்னர் அவரை அணுகி கண்டிப்பது தெளிவாகத் தெரிகிறது.
ALSO READ: ஐபிஎல் 2026 பைனல் எப்போது..? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!
ஆரஞ்சு கேப் பந்தயத்திலும் வைபவ் சூர்யவன்ஷி தற்போது முதலிடம்:
வைபவ் சூர்யவன்ஷியின் 96 ரன்கள் ராஜஸ்தான் அணி 214 ரன்களை எட்ட உதவியது. இருப்பினும், குஜராத் டைட்டன்ஸ் அணி 215 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரில் விரட்டிப் பிடித்தது. தகுதிச்சுற்று 2-ல் 96 ரன்கள் எடுத்ததன் மூலம் வைபவ் சூர்யவன்ஷி தனது ஆரஞ்சு கேப்பை தக்க வைத்துக் கொண்டார். நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் வைபவ் சூர்யவன்ஷி இப்போது 16 போட்டிகளில் 776 ரன்கள் எடுத்துள்ளார்.