IPL 2026: எகிறி அடித்த சூர்யவன்ஷி.. 200ஐ கடந்த ராஜஸ்தான்.. குஜராத்துக்கு 215 ரன்கள் இலக்கு!
GT vs RR Qualifier 2: ஐபிஎல் 2026 சீசனின் இன்று அதாவது 2026 மே 29ம் தேதி நடைபெற்று வரும் 2வது தகுதிச்சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் முல்லன்பூரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 96 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 29ம் தேதி நடைபெற்று வரும் 2வது தகுதிச்சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் முல்லன்பூரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 96 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியிலாவது சதம் அடிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்டபோது வைபவ் சூர்யவன்ஷி 18வது ஓவர் வரை களத்தில் நீடித்து நம்பிக்கை கொடுத்தார்.
ALSO READ: மும்பையுடன் உறவை முறித்துக்கொண்ட ஹர்திக்..? கிடைத்த முக்கிய தகவல்!




47 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் உதவியுடன் 96 ரன்கள் எடுத்து குஜராத் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதற்கிடையில் ரவீந்திர ஜடேஜாவும் 45 ரன்கள் எடுத்தார். இருப்பினும், கடைசி ஓவரில் டோனோவன் ஃபெரேரா 11 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடியதன் காரணமாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 200 ஐ கடந்தது.
ரன் மழை:
Finishing touches POWERED by Finisher Ferreira! 😮💨
Halla Bol with the same energy for the next 20 🔥 pic.twitter.com/LX11cj4Rnp
— Rajasthan Royals (@rajasthanroyals) May 29, 2026
15வது ஓவருக்குப் பிறகுதான் ரன்மழை பொழிய தொடங்கியது. ராஜஸ்தான் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்திருந்தது. வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியைத் தொடங்கி, கடைசி ஐந்து ஓவர்களில் மொத்தம் 82 ரன்கள் எடுக்கப்பட்டன. ரஷித் கானின் கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை அடித்து 27 ரன்கள் எடுத்த டோனவன் பெரேரா, அணியின் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.
ALSO READ: கேப்டனாக மோசமான செயல்பாடு.. லக்னோ கேப்டன் பதவியிலிருந்து விலகிய ரிஷப் பண்ட்!
215 ரன்களை கடக்குமா குஜராத்..?
ஐபிஎல் 2026 இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமானால், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி, இதுவரை இல்லாத மிகப்பெரிய ரன் சேஸிங்கை படைக்க வேண்டும். ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணி சேஸிங் செய்த அதிகபட்ச ரன் 204 ஆகும். இதையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி எட்டியது.