IPL 2026: ரோஹித் முதல் எம்.எஸ். தோனி வரை.. ஐபிஎல் 2026 சீசனில் மோசமாக செயல்பட்ட ஆடும் லெவன்..!
IPL Worst Playing 11: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 18 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். இருப்பினும், இந்த சீசனில் அவரது சராசரி வெறும் 28 ஆக இருந்தது. காயம் காரணமாக ரோஹித் சர்மா ஒரு சில லீக் போட்டிகளையும் தவறவிட்டார். மீதமுள்ள 9 போட்டிகளில் அவரது செயல்பாடு சுமாராகவே இருந்தது.
ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) கிட்டத்தட்ட இன்னும் 3 நாட்களில் இறுதிப்போட்டியுடன் முடிவடைய இருக்கிறது. ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் ஒரு சில இளம் நட்சத்திர வீரர்கள் தங்களது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், ஐபிஎல் 2026 சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில அனுபவ வீரர்கள் கூட சிறப்பாக செயல்படவில்லை. அதன்படி, விளையாடாத அல்லது சொதப்பிய ஒரு லெவன் அணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லெவனில் உள்ள வீரர்களின் ஐபிஎல் சம்பளம் கோடிக்கணக்கில் உள்ளது. ஆனாலும், அந்த வீரர்களின் செயல்பாடு அதற்கு நேர்மாறாகவே அமைந்துள்ளது. உதாரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 18 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். இருப்பினும், இந்த சீசனில் அவரது சராசரி வெறும் 28 ஆக இருந்தது. காயம் காரணமாக ரோஹித் சர்மா ஒரு சில லீக் போட்டிகளையும் தவறவிட்டார். மீதமுள்ள 9 போட்டிகளில் அவரது செயல்பாடு சுமாராகவே இருந்தது. அதன்படி, ஐபிஎல் 2026 சீசனில் சொதப்பிய ஆடும் லெவன் பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: சிஎஸ்கே அணிக்காக வழிகாட்டியாக வரும் தோனி.. அணி நிர்வாகம் சூசக தகவல்!
ருதுராஜ் கெய்க்வாட்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2026 சீசனில் 14 போட்டிகளில் விளையாடி வெறும் 337 ரன்கள் எடுத்தார். அவரை, சிஎஸ்கே அணி அதிகபட்சமாக ரூ. 18 கோடி ஊதியமாக வழங்குகிறது.




ரோஹித் சர்மா:
காயம் காரணமாக ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடவில்லை. நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் 9 போட்டிகளில் 283 ரன்கள் எடுத்தார். ரோஹித் மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்து ரூ. 16.30 கோடி சம்பளம் பெறுகிறார்.
சூர்யகுமார் யாதவ்:
மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று சூர்யகுமார் யாதவின் செயல்திறனே ஆகும். சூர்யகுமார் யாதவ் 20.77 என்ற மோசமான சராசரியில் வெறும் 270 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ரிஷப் பண்ட்:
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரான ரிஷப் பண்ட், ஒரு வீரராக மட்டுமின்றி கேப்டனாகவும் தோல்வியடைந்தார். தனிப்பட்ட முறையில், பண்ட் 14 போட்டிகளில் வெறும் 312 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரிஷப் பண்ட், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடமிருந்து ரூ. 27 கோடி சம்பளம் பெறுகிறார்.
எம்.எஸ்.தோனி:
ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. சிஎஸ்கே நிர்வாகம் மகேந்திர சிங் தோனிக்கு ரூ.4 கோடி சம்பளம் வழங்குகிறது.
நிக்கோலஸ் பூரன்:
ரிஷப் பந்தின் சக அணி வீரரான நிக்கோலஸ் பூரன், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ரூ. 21 கோடி சம்பளம் பெறுகிறார். ஐபிஎல் 2026 தொடரில் அவரது சராசரி வெறும் 18 மட்டுமே ஆகும்.
ஜிதேஷ் சர்மா:
மிடில் ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மிகப்பெரிய பலவீனமாக ஜிதேஷ் சர்மா இருந்து வருகிறார். ஆர்சிபி அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்துள்ளது. இந்த சீசன் முழுவதும் ஜிதேஷ் சர்மாவால் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியவில்லை.
ஹர்திக் பாண்டியா:
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரூ. 16.35 கோடி சம்பளம் வாங்கும் ஹர்திக் பாண்டியா, கடந்த 2 சீசன்களை சேர்த்து வெறும் 430 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
வாஷிங்டன் சுந்தர்:
ஐபிஎல் 2026 சீசனில் வாஷிங்டன் சுந்தர் அதிகம் பந்துவீசாததால், அவர் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், வாஷிங்டன் சுந்தர் 15 போட்டிகளில் 311 ரன்கள் எடுத்தார், ஆனால் பல போட்டிகளில் வெற்றியைத் தேடித்தரும் இன்னிங்ஸ்களை மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடவில்லை.
அர்ஷ்தீப் சிங்:
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுக்கு பெயர் பெற்ற அர்ஷ்தீப் சிங், ரூ. 18 கோடி சம்பளம் பெறுகிறார். இருப்பினும், நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் 14 போட்டிகளில் அவரால் 14 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
ALSO READ: ஐபிஎல் தகுதிச்சுற்று 2.. சூர்யவன்ஷிக்கு தனி பவுலிங் பிளான்.. குஜராத் பயிற்சியாளர் சொன்ன விஷயம்!
ஜஸ்பிரித் பும்ரா:
மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணம். பொதுவாகத் துல்லியமாகப் பந்துவீசும் ஜஸ்பிரித் பும்ரா, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக எகானமி ரேட்டைப் பெற்றிருந்தார். இவ்வாறாக, பும்ரா 14 போட்டிகளில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.
டிரென்ட் போல்ட்:
ஐபிஎல் 2026 சீசனில் டிரென்ட் போல்ட்டின் ஸ்விங் முன்பு போல் சிறப்பாக இல்லை. போல்ட் நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி, 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.