AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: பந்துவீச்சில் பயங்கரம்! குஜராத்தை வீழ்த்தி பைனலுக்கு சென்ற பெங்களூரு!

RCB vs GT Qualifier 1 Highlights: ஐபிஎல் 2026 சீசனின் குவாலிஃபையர் முதல் போட்டியில் இன்று அதாவது 2026 மே 26ம் தேதி தர்மசாலாவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. இது ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். 255 ரன்கள் எடுத்தால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லலாம் என்ற அடிப்படையில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

IPL 2026: பந்துவீச்சில் பயங்கரம்! குஜராத்தை வீழ்த்தி பைனலுக்கு சென்ற பெங்களூரு!
Rcb In Final
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 27 May 2026 00:00 AM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) குவாலிஃபையர் முதல் போட்டியில் இன்று அதாவது 2026 மே 26ம் தேதி தர்மசாலாவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. இது ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். 255 ரன்கள் எடுத்தால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லலாம் என்ற அடிப்படையில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ALSO READ: IPL 2026: எலிமினேட்டர் சுற்றில் மழை எச்சரிக்கை.. மோதும் SRH vs RR.. யாருக்கு சாதகம் இது?

இதையடுத்து, வருகின்ற 2026 மே 31ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோப்பையை வெல்லும் முயற்சியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கும். கேப்டன் ரஜத் பதிதாரின் ஆட்டமிழக்காத 93 ரன்கள் பெங்களூருவின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. அதன்பிறகு, பெங்களூருவின் பந்துவீச்சாளர்கள் கிட்டத்தட்ட அனைவரும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினர்.

ஆர்சிபி 5வது முறையாக இறுதிப் போட்டி:

ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 5வது முறையாகும். இதற்கு முன்பு, ஆர்சிபி 2009, 2011, 2016, 2025 மற்றும் தற்போது 2026-ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதிக இறுதிப் போட்டிகளில் பங்கேற்ற அணிகளின் பட்டியலில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்குப் பின்னால் ஆர்சிபி தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ராகுல் தெவாடியா மட்டுமே ஒரு பெரிய ஸ்கோரை எடுத்தார். தெவாடியா 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இது இந்த சீசனில் அவரது முதல் அரைசதமாகும். இவருக்கு முன்னதாக, ஜோஸ் பட்லர் 29 ரன்கள் எடுத்திருந்தார். அதேநேரத்தில், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். பெங்களூருவின் வெற்றிக்கு ரஜத் படிதார் வெறும் 33 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் உதவியுடன் 93 ரன்கள் எடுத்தார். விராட் கோலி மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோரும் தலா 43 ரன்கள் பங்களித்தனர்.

ALSO READ: IPL 2026: ரஜத் படிதார் அதிரடி 93 ரன்கள்.. குஜராத் அணிக்கு 255 ரன்கள் இலக்கு..!

படிதாரின் தலைமையின் கீழ், நடப்பு சாம்பியனாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மூன்றாவது அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றது. இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மட்டுமே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளன.

Follow Us