AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: பைனலை நோக்கி 4 அணிகள்.. பிளே ஆஃப்பில் அதிக முறை ஆதிக்கம் செலுத்தியது யார்..?

IPL 2026 Playoffs: ஐபிஎல் 2026-ன் தகுதிச்சுற்று 1-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நாளை அதாவது 2026 மே 26ம் தேதி மோதுகின்றன. அதே சமயம், எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணிகள் வருகின்ற 2026 மே 27ம் தேதி மோதுகின்றன.

IPL 2026: பைனலை நோக்கி 4 அணிகள்.. பிளே ஆஃப்பில் அதிக முறை ஆதிக்கம் செலுத்தியது யார்..?
ஐபிஎல் 2026 பிளே ஆஃப்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 May 2026 19:02 PM IST

கடந்த 2026ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் 2026 சீசனானது (IPL 2026) வருகின்ற 2026 மே 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், லீக் சுற்று முடிவுக்கு பிறகு, ஐபிஎல் 2026-ன் தகுதிச்சுற்று 1-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நாளை அதாவது 2026 மே 26ம் தேதி மோதுகின்றன. அதே சமயம், எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணிகள் வருகின்ற 2026 மே 27ம் தேதி மோதுகின்றன. இப்போது, ​​இந்த 4 அணிகளில் எந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக உள்ளது. இதற்கிடையில், பிளேஆஃப் சுற்றில் இந்த 4 அணிகளின் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சாம்பியன் பட்டத்திற்கு 4 அணிகள்.. பிளேஆஃப் போட்டிகள் எப்போது, ​​எங்கே நடைபெறும்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிகபட்சமாக 17 பிளேஆஃப் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில், ஆர்சிபி அணி 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 10 போட்டிகளில் தோல்வியை சந்திந்துள்ளது. எனவே, நாக் அவுட் சுற்றுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் செயல்பாடு சிறப்பாக இல்லை. எனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றதை விட அதிகமான போட்டிகளில் தோல்வியே சந்தித்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ்:

குஜராத் டைட்டன்ஸ் நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. குஜராத் அணி நாளை அதாவது 2026 மே 26ம் தேதி தகுதிச்சுற்று 1-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த 2022ம் ஆண்டு முதல் ஐபிஎல்லில் விளையாடி வருகிறது. அப்போதிருந்து, குஜராத் டைட்டன்ஸ் அணி 6 பிளேஆஃப் போட்டிகளில் விளையாடி, 3ல் வெற்றியும் 3ல் தோல்வியும் பெற்றுள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 முறை பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆனால், இந்த 14 போட்டிகளில் ஆறில் மட்டுமே ஹைதராபாத் அணியால் வெற்றி பெற முடிந்துள்ளது. அதே சமயம், 8 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர். இந்த ஆண்டும், எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாஹ் அணி, ராஜஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியில் தோற்கும் அணி தொடரிலிருந்து வெளியேற்றப்படும்.

ALSO READ: ஐபிஎல் 2026 சீசனில் புதிய வரலாறு.. சிஎஸ்கே, எம்ஐ பட்டியலில் இணையும் புதிய அணி!

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை மொத்தம் 11 பிளேஆஃப் போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று, 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்த ஆண்டும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடுமையான சவாலை எதிர்கொள்ளும். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, குவாலிஃபையர் 2-ல் விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.

Follow Us