AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல் 2026 சீசனில் புதிய வரலாறு.. சிஎஸ்கே, எம்ஐ பட்டியலில் இணையும் புதிய அணி!

History will be made in IPL 2026: நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2025-ல் தங்களது முதல் பட்டத்தை வென்றது. இம்முறையும், ஆர்சிபி சிறப்பாகச் செயல்பட்டு ஐபிஎல் 2026 சீசனில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் 2022ம் ஆண்டின் சாம்பியன் அணியாகும். மேலும், 4வது முறையாக பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

IPL 2026: ஐபிஎல் 2026 சீசனில் புதிய வரலாறு.. சிஎஸ்கே, எம்ஐ பட்டியலில் இணையும் புதிய அணி!
2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது?
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 May 2026 18:05 PM IST

ஐபிஎல் 2026 (IPL 2026) தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளேஆஃப் சுற்றுகளில் எந்தெந்த அணிகள் யாருடன் மோதும் என்ற அட்டவணையும் வெளியாகியுள்ளது. இப்போது புதிய சாம்பியன் அணிக்காகக் காத்திருக்கப்படுகிறது. இந்த முறை ஐபிஎல்-லில் புதிய சாம்பியன் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது தெளிவாகியுள்ளது. இம்முறை, எந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்கிறதோ, அந்த அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும். இதன் பொருள், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளின் சிறப்புமிக்க கிளப்பில் இப்போது ஒரு புதிய அணியும் பயணிக்க இருக்கிறது.

ALSO READ: ஹர்திக் கேப்டன்ஷி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.. பொல்லார்ட் கருத்தால் பரபரப்பு..!

ஐபிஎல்லில் வரலாறு படைக்கப்போகும் புதிய அணி:

வருகின்ற 2026 மே 24ம் தேதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப் சுற்றில் 4வது மற்றும் இறுதி இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. சுவாரஸ்யமாக, பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. ஐபிஎல் 2026-க்குப் பிறகு, இந்த லீக்கில் ஒரு அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இருக்கிறது.

நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2025-ல் தங்களது முதல் பட்டத்தை வென்றது. இம்முறையும், ஆர்சிபி சிறப்பாகச் செயல்பட்டு ஐபிஎல் 2026 சீசனில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் 2022ம் ஆண்டின் சாம்பியன் அணியாகும். மேலும், 4வது முறையாக பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 2016ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தோற்கடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கோப்பையை வென்றது. அதே சமயம், கேப்டன் ஷேன் வார்னேவின் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. இப்போது, ​​இந்த 4 அணிகளில் கோப்பையை வெல்லும் அணி இரண்டாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆகும்.

ALSO READ: குவாலிஃபையரில் 4வது முறையாக கால் வைக்கும் ஆர்சிபி.. இதுவரையிலான சாதனை என்ன?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தனக்கென மற்றொரு சாதனையை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 11-வது முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம், இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சமமாகியுள்ளது. அதிக முறை (12) முதல் 4 இடங்களுக்குள் வந்த சாதனையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வசமே உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா தலா 8 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 7 முறையும், டெல்லி கேப்பிடல்ஸ் 6 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 4 முறையும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

 

Follow Us