AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஹர்திக் கேப்டன்ஷி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.. பொல்லார்ட் கருத்தால் பரபரப்பு..!

Hardik Pandyas Captaincy: 10 அணிகள் கொண்ட புள்ளி அட்டவணையில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 9வது இடத்தில் தனது ஐபிஎல் 2026 சீசனில் பயணத்தை முடித்துக்கொண்டது. இந்த சீசனில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 14 போட்டிகளில் 10 தோல்விகளைச் சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாக அமைந்துள்ளது.

IPL 2026: ஹர்திக் கேப்டன்ஷி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.. பொல்லார்ட் கருத்தால் பரபரப்பு..!
ஹர்திக் பாண்ட்யா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 May 2026 15:46 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், முன்னாள் ஜாம்பவான் ஆல்-ரவுண்டருமான கீரோன் பொல்லார்ட், கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியின் ஐபிஎல் 2026 (IPL 2026) பயணம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என்று ஒப்புக்கொண்டார். லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியுடன், 10 அணிகள் கொண்ட புள்ளி அட்டவணையில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 9வது இடத்தில் தனது ஐபிஎல் 2026 சீசனில் பயணத்தை முடித்துக்கொண்டது. இந்த சீசனில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 14 போட்டிகளில் 10 தோல்விகளைச் சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாக அமைந்துள்ளது.

ALSO READ: மும்பையை வீழ்த்தி ராஜநடை.. பிளே ஆஃப்க்குள் அடியெடுத்து வைத்த ராஜஸ்தான்..!

ஹர்திக் மற்றும் அணிக்கு கடினமான பயணம்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் கூறியதாவது, ”கேப்டனாக ஹர்திக் பாண்டியா விரும்பியபடி இந்த ஐபிஎல் 2026 சீசன் அமையவில்லை. அணி நிர்வாகமும் அவரிடம் இருந்து சிறந்த முடிவுகளை எதிர்பார்த்தது. அதேநேரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். தோல்விக்குப் பிறகு எந்தவொரு தனிப்பட்ட வீரரையும் குறை கூறுவது சரியாக இருக்காது. நாங்கள் அனைவரும் முயற்சி செய்தோம். ஆனால், விஷயங்கள் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. இப்போது நாம் அமர்ந்து, நமது எதிர்கால உத்தியைத் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது,” என்றார்.

மும்பை கேப்டன் மாற்றமா..?

தொடர்ந்து பேசிய பொல்லார்ட், “மும்பை இந்தியன்ஸின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, அணியில் பெரிய மாற்றங்கள் செய்வது குறித்து நிறையப் பேசப்படுகிறது. ஆனால், இந்த நேரத்தில் உணர்ச்சிகளின் அடிப்படையில் எந்த முடிவும் எடுப்பது சரியாக இருக்காது. அணியில் என்ன மாற்றங்கள் செய்யப்படும் என்பதை முடிவு செய்ய இது நேரமல்ல. நாம் இந்த ஐபிஎல் 2026 சீசனை நடுநிலையாக மதிப்பீடு செய்து, எங்கு தவறுகள் செய்யப்பட்டன என்பதைக் கண்டறிய வேண்டும்” என்றார்.

ALSO READ: சாம்பியன் பட்டத்திற்கு 4 அணிகள்.. பிளேஆஃப் போட்டிகள் எப்போது, ​​எங்கே நடைபெறும்?

பும்ரா செயல்திறன்:

ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி லீக் போட்டியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய பொல்லார்ட், ” நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் மும்பை அணி ஏற்கனவே பிளேஆஃப் தகுதிப் போட்டியிலிருந்து வெளியேறியிருந்தபோது, ​​பும்ராவை விளையாட வைப்பதில் பெரிய அர்த்தம் இல்லை. அவர் இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு மிகப்பெரிய சொத்து. மேலும் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுப்பது முக்கியமானதாக இருந்தது. எங்களால் தொடர்ச்சியாகப் போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை. மேலும், எங்களுக்கு உத்வேகம் கிடைத்தபோதும், அதை எங்களால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இறுதியில், நாங்கள் தகுதியான இடத்தைப் பெற்றோம்” என்றார்.

Follow Us