AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற 4 அணிகள்.. எந்த அணி யாருடன் மோதும்..?

IPL 2026 Playoffs: முதல் தகுதிச்சுற்றுப் போட்டி, புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முறையே முதல் மற்றும் 2ம் இடங்களில் உள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையே முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடைபெறும்.

IPL 2026: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற 4 அணிகள்.. எந்த அணி யாருடன் மோதும்..?
பிளே ஆஃப் போட்டிகள்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 May 2026 08:00 AM IST

ஐபிஎல் 2026 (IPL 2026) பிளேஆஃப் சுற்றுக்கான 4 அணிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணி, முதல் நான்கு இடங்களுக்குள் நுழைந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் தனது இடத்தை உறுதி செய்தது. அந்த வரிசையில் பிளேஆஃப் சுற்றுக்கு முதலில் தகுதி பெற்றது ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான். அதனைத் தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெற்றன. தற்போது, ​​ராஜஸ்தான் அணியும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. தொடர்ந்து, 4 அணிகள் இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், எந்த அணியுடன் யாருடன் விளையாடும்? எப்போது போட்டிகள் நடைபெறும் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: குவாலிஃபையர் 1ல் மழை எச்சரிக்கை.. மோதும் பெங்களூரு – குஜராத்.. யாருக்கு சாதகம்?

முதல் தகுதிச்சுற்றுப் போட்டி எப்போது..? யார் யார் மோதல்..?

முதல் தகுதிச்சுற்றுப் போட்டி, புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முறையே முதல் மற்றும் 2ம் இடங்களில் உள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையே முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடைபெறும். இந்தப் போட்டியானது வருகின்ற 2026 மே 26ம் தேதி தர்மசாலாவில் நடைபெறும்.

எலிமினேட்டர் சுற்றில் யார் யார் மோதல்:

ஐபிஎல் 2026 புள்ளிப் பட்டியலில் 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்று போட்டியில் விளையாடும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முறையே புள்ளிப் பட்டியலில் 3வது மற்றும் 4வது இடங்களில் உள்ளன. இந்த எலிமினேட்டர் போட்டியானது வருகின்ற 2026 மே 27ம் தேதி புது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும்.

முதல் 2 இடங்களில் உள்ள அணிகளுக்கு 2 வாய்ப்புகள் உள்ளன. எலிமினேட்டர் சுற்று போட்டியில் தோற்றால் அந்த அணி வெளியேற்றப்படுவார்கள். முதல் 2 இடங்களைப் பிடித்து தகுதிச்சுற்று 1-ல் விளையாடும் அணிகளுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. தகுதிச்சுற்று 1-ல் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதே சமயம், தோற்கும் அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறும். தகுதிச்சுற்று 2-ல் வெற்றி பெறும் அணி 2வது இறுதிப் போட்டியாளராக மாறும். இவ்விரு அணிகளுக்கும் இடையே இறுதிப் போட்டி நடைபெறும்.

ALSO READ: மும்பையை வீழ்த்தி ராஜநடை.. பிளே ஆஃப்க்குள் அடியெடுத்து வைத்த ராஜஸ்தான்..!

எலிமினேட்டர் போட்டியில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். மேலும், வெற்றி பெறும் அணி, குவாலிஃபையர் 1-ல் தோற்ற அணியை குவாலிஃபையர் 2-ல் எதிர்கொள்ளும். குவாலிஃபையர் 2ல் வருகின்ற 2026 மே 29ம் தேதி புதிய சண்டிகரில், எலிமினேட்டர் போட்டி நடைபெற்ற அதே மைதானத்தில் நடைபெறும். இந்த முறை எந்த அணி சாம்பியனாக உருவெடுக்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

Follow Us