AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சிஎஸ்கே அணிக்காக வழிகாட்டியாக வரும் தோனி.. அணி நிர்வாகம் சூசக தகவல்!

MS Dhoni Mentor For CSK: தோனி நடப்பு ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் அணியுடன் களத்தில் இணையவில்லை என்றாலும், சென்னையின் கடைசி உள்ளூர் போட்டிக்காக எம்.எஸ்.தோனி அணியுடன் மைதானத்திற்கு வந்தார். அந்த போட்டியில் தோனி விளையாடவில்லை என்றாலும், அணியின் கடைசி உள்ளூர் போட்டியில் ரசிகர்கள் முன் தோன்றி டி சர்ட் மற்றும் பந்துகளை வழங்கினார்.

IPL 2026: சிஎஸ்கே அணிக்காக வழிகாட்டியாக வரும் தோனி.. அணி நிர்வாகம் சூசக தகவல்!
மகேந்திர சிங் தோனி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 May 2026 17:29 PM IST

ஐபிஎல் 2026 சீசனானது (IPL 2026) தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஏற்கனவே பைனலுக்கு சென்ற நிலையில், இன்னும் இரு தினங்களில் எந்த அணி பைனலுக்கு செல்லும் என்பது தெரிய வரும். இந்தநிலையில், ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ். தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. காயம் காரணமாக, எம்.எஸ். தோனி (MS Dhoni) அந்த சீசன் முழுவதும் பங்கேற்கவில்லை. இதற்கிடையில், அவரது ஓய்வு குறித்த யூகங்கள் தீவிரமடைந்தன. இதை தொடர்ந்து, தோனி யாருக்கும் தெரிவிக்காமல் இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து அமைதியாக ஓய்வு பெற இருப்பதாக வதந்திகள் பரவின. தற்போது, ​​சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமே ஒரு முக்கிய குறிப்புடன் அவரது ஓய்வை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, வருகின்ற 2027 ஐபிஎல் சீசனில் தோனி ஒரு பயிற்சியாளராகவோ அல்லது வழிகாட்டியாகவோ தோன்றக்கூடும் என்றும் கூறப்பட்டது.

ALSO READ: சிஎஸ்கே பயிற்சிக்குழுவில் தலையிட்ட தோனி.. வெளியான பரபரப்பு குற்றச்சாட்டு!

சிஎஸ்கே சி.இ.ஓ விளக்கம்:

முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து பேசிய அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், எம்.எஸ்.தோனி எந்தப் பொறுப்பில் அணியுடன் இணைந்திருந்தாலும், அவரை என்றென்றும் அணியுடன் வைத்திருக்க விரும்புவதாகக் கூறினார். இதுகுறித்து ரெவ் ஸ்போர்ட்ஸிடம் பேசிய காசி விஸ்வநாதன், ” எம்.எஸ்.தோனி சிஎஸ்கே அணியில் வீரராகவோ, பயிற்சியாளராகவோ அல்லது வழிகாட்டியாகவோ எந்தப் பொறுப்பில் இருந்தாலும் நிரந்தரமாக வைத்திருக்கவே நாங்கள் விரும்புகிறோம். என்ன நடந்தாலும், அது அவர் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமையும். ஒவ்வொரு முடிவும் அவருடையது” என்றார்.

ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி..

தோனி நடப்பு ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் அணியுடன் களத்தில் இணையவில்லை என்றாலும், சென்னையின் கடைசி உள்ளூர் போட்டிக்காக எம்.எஸ்.தோனி அணியுடன் மைதானத்திற்கு வந்தார். அந்த போட்டியில் தோனி விளையாடவில்லை என்றாலும், அணியின் கடைசி உள்ளூர் போட்டியில் ரசிகர்கள் முன் தோன்றி டி சர்ட் மற்றும் பந்துகளை வழங்கினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி உள்ளூர் போட்டியை கடந்த 2026 மே 18ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடியது.

ALSO READ: ரஜத் படிதார் அதிரடி 93 ரன்கள்.. குஜராத் அணிக்கு 255 ரன்கள் இலக்கு..!

எம்.எஸ். தோனியின் ஐபிஎல் வாழ்க்கை

எம்.எஸ். தோனியின் ஐபிஎல்லில் கடந்த 2008ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். தோனி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 278 போட்டிகளில் 242 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, 38.30 சராசரி மற்றும் 137.45 ஸ்டிரைக் ரேட்டுடன் 24 அரை சதங்களுடன் 5439 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் தோனியின் அதிகபட்ச ஸ்கோர் 84 நாட் அவுட் ஆகும்.

Follow Us