AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சிஎஸ்கே பயிற்சிக்குழுவில் தலையிட்ட தோனி.. வெளியான பரபரப்பு குற்றச்சாட்டு!

MS Dhoni: சிஎஸ்கேவின் பயணம் ஐபிஎல் 2026 சீசனில் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை, சில வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சிஎஸ்கே-வின் பயிற்சியாளராக ஆக விரும்பும் ஒருவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், ஆனால் தோனி அணியில் இருக்கும் வரை தன்னால் அந்த அணியில் சேர முடியாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தது.

IPL 2026: சிஎஸ்கே பயிற்சிக்குழுவில் தலையிட்ட தோனி.. வெளியான பரபரப்பு குற்றச்சாட்டு!
மகேந்திர சிங் தோனி - ஸ்டீபன் பிளெமிங்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 May 2026 17:23 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் எம்.எஸ். தோனி இடையிலான உறவு கடந்த 18 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ஆனால், 19 சீசன்கள் கொண்ட இந்த லீக்கில் முதல் முறையாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஐபிஎல் 2026ல் (IPL 2026) சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியதுடன், சிஎஸ்கே வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இவையனைத்திற்கும் மத்தியில், தோனி அணியில் இருந்தபோதிலும், போட்டியின்போது தூரமாகவே இருந்தார். இது அணியின் எதிர்காலம், தலைமை மற்றும் நிர்வாகம் உட்பட பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தக் கேள்விகள் தொடர்பாக ஒரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிஎஸ்கே அணியில் சேரும் வாய்ப்பை நிராகரிக்குமாறு ஒரு பயிற்சியாளரை தோனிதான் கூறினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ: ஹெட்டுடன் கைகுலுக்க மறுத்த கோலி.. களத்தில் காரசார வாதம்.. போட்டியில் நடந்தது என்ன?

பிளே ஆஃப் பயணத்தை முடித்த சிஎஸ்கே:

ஐபிஎல் 2026 சீசனின் தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் சென்னை அணி தோல்வியடைந்தது . இதன் மூலம், பிளேஆஃப் சுற்றுக்கான தகுதியிலிருந்து சிஎஸ்கே அணி முற்றிலுமாக வெளியேறியதுடன், இந்த சீசனின் பயணமும் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து 3வது சீசனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியுள்ளது. இதன் அடிப்படையில், சிஎஸ்கே அணியில் மட்டுமல்லாமல் பயிற்சியாளர் குழுவிலும் மாற்றங்கள் தேவைப்பட்டது. இருப்பினும், தோனி பயிற்சியாளர் நியமிப்பதில் தடையாக இருந்தார் என்று கூறப்படுகிறது.

சிஎஸ்கே-யின் பயிற்சி குறித்த தகவல்:

சிஎஸ்கேவின் பயணம் ஐபிஎல் 2026 சீசனில் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை, சில வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சிஎஸ்கே-வின் பயிற்சியாளராக ஆக விரும்பும் ஒருவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், ஆனால் தோனி அணியில் இருக்கும் வரை தன்னால் அந்த அணியில் சேர முடியாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தது.

ALSO READ: ஐபிஎல் 2027 சீசனில் தோனி விளையாடுவாரா..? ருதுராஜ் கெய்க்வாட் கொடுத்த ஷாக் பதில்!

கடந்த 2025ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியே ஒரு புகழ்பெற்ற இந்தியப் பயிற்சியாளரை நிராகரித்தது. ஒரு முக்கிய இந்தியப் பயிற்சியாளர் சிஎஸ்கே அணியில் பயிற்சியாளராக இணைவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்ததாக அதே அறிக்கை வெளிப்படுத்தியது. இந்தப் பயிற்சியாளருக்கு சிஎஸ்கே அணியின் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களுடன் நல்ல உறவுகள் உள்ளன. இருப்பினும், சிஎஸ்கே அணியே அவரைக் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டது. இதன் விளைவாக, சென்னை அணி தற்போதுள்ள பயிற்சி அமைப்புடனேயே நீடிக்கிறது. தற்போது, ​​நியூசிலாந்து ஜாம்பவான் ஸ்டீபன் ஃபிளெமிங் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக உள்ளார். ஃபிளெமிங் கடந்த 2009ம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். தற்போது அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Follow Us