IPL 2026: ஐபிஎல் 2027 சீசனில் தோனி விளையாடுவாரா..? ருதுராஜ் கெய்க்வாட் கொடுத்த ஷாக் பதில்!
MS Dhoni: கால் தசைக் காயம் காரணமாக எம்.எஸ். தோனி, ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2026 சீசன் தொடங்கிய நாளான கடந்த 2026 மார்ச் 28ம் தேதி கால் தசைக் காயம் காரணமாக தோனி 2 வாரங்களுக்கு விளையாடாமல் இருக்கலாம் என்று சென்னை அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக எம்.எஸ். தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி, 2026 மே 21ம் தேதியான நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிளேஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியது. காயம் காரணமாக தோனி இந்த சீசன் முழுவதும் விளையாடவில்லை. தற்போது, அடுத்த ஐபிஎல் தொடரான 2027-ல் தோனி விளையாடுவாரா இல்லையா என்பதை குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
ALSO READ: ஒரு போட்டியில் கூட இல்லாத ’தல’ தரிசனம்.. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை!
தோனியின் வருகை குறித்து கெய்க்வாட் என்ன கூறினார்?
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பிறகு, அடுத்த ஐபிஎல் 2027 சீசனில் தோனி விளையாடுவதைப் பார்க்க முடியுமா என்று ருதுராஜ் கெய்க்வாடிடம் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “அடுத்த ஆண்டு தெரிந்துவிடும். எனக்கும் அடுத்த ஆண்டு தெரிந்துவிடும். அவர் இல்லாமல் விளையாடுவது எங்களுக்குக் கடினமாக இருந்தது. அடுத்த சீசனில் விளையாடுவது குறித்த எம்.எஸ். தோனியின் முடிவு அவருடைய சொந்தமான முடிவு. 2027 ஐபிஎல் சீசனில் விளையாடத் தயாராக இருக்கிறாரா என்பதை அவர் பரிசீலிப்பார்” என்றார்.




2026 ஐபிஎல் சீசனில் தோனி ஏன் விளையாடவில்லை?
கால் தசைக் காயம் காரணமாக எம்.எஸ். தோனி, ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2026 சீசன் தொடங்கிய நாளான கடந்த 2026 மார்ச் 28ம் தேதி கால் தசைக் காயம் காரணமாக தோனி 2 வாரங்களுக்கு விளையாடாமல் இருக்கலாம் என்று சென்னை அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, அவசரமாக ராஞ்சிக்கு தோனி சென்றார். இதன் காரணமாக, இந்த ஐபிஎல் 2026 சீசன் முழுவதையும் தவறவிட்டார்.
கடைசி போட்டிக்கு முன்பு கட்டைவிரலில் காயம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடியது. போட்டிக்கு முன்னதாக மகேந்திர சிங் தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவருக்குக் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டிருந்ததே, வீடு திரும்புவதற்கான முடிவுக்குக் காரணமாக அமைந்தது.
ALSO READ: கொடுத்த வாய்ப்பு வீண்.. சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்றப்படும் 4 வீரர்கள்..!
எம்.எஸ்.தோனியின் ஐபிஎல் வாழ்க்கை:
எம்.எஸ். தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை 278 போட்டிகளில் விளையாடியுள்ளார். 242 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, அவர் 38.30 சராசரி மற்றும் 137.45 ஸ்டிரைக் ரேட்டுடன் 5439 ரன்கள் எடுத்துள்ளார். இந்தக் காலகட்டத்தில், தோனி தனது பெயரில் 24 அரை சதங்களை அடித்துள்ளார். ஐபிஎல் வாழ்க்கையில் தோனியின் அதிகபட்ச ஸ்கோர் 84 நாட் அவுட் ஆகும்.