IPL 2026: பிளேஆஃப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே.. ஒரு இடத்திற்கு 4 அணிகள் போட்டி.. சமன்பாடு யாருக்கு சாதகம்?
IPL Playoff Scenarios: ஐபிஎல் 2026 சீசனில் இன்னும் 4 லீக் போட்டிகள் மீதமுள்ள நிலையில், பிளேஆஃப் சுற்றுக்கு 3 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் 4வது இடத்திற்காகப் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு அணிக்கும் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) ஐபிஎல் 2026 சீசனிலிருந்து (IPL 2026) அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டது. 2026 மே 22ம் தேதியான நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. குஜராத் டைட்டன்ஸ் அணி (Gujarat Titans) ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், தற்போது சுப்மன் கில் தலைமையிலான அணி முதல் இரண்டு இடங்களுக்குள் தங்களது இடத்தை உறுதி செய்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் தகுதி பெற்றுள்ளன. தற்போது, 4வது இடத்திற்காக 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ALSO READ: வெளியேறியது சிஎஸ்கே.. பிளே ஆஃப் அணிகள் என்னென்ன? ஐபிஎல் புள்ளி பட்டியல்!
ஐபிஎல் 2026 சீசனில் இன்னும் 4 லீக் போட்டிகள் மீதமுள்ள நிலையில், பிளேஆஃப் சுற்றுக்கு 3 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் 4வது இடத்திற்காகப் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு அணிக்கும் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.




ராஜஸ்தான் ராயல்ஸ்
பிளேஆஃப் போட்டியில் உள்ள 4 அணிகளில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மட்டுமே எந்த வித சமன்பாடுகளும் இன்றி நேரடியாக செல்ல முடியும். தங்களின் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால், நேரடியாக பிளேஆஃப்களுக்குத் தகுதி பெறும். ராஜஸ்தானின் கடைசிப் போட்டி வருகின்ற 2026 மே 24ம் தேதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெறுகிறது. இருப்பினும், ராஜஸ்தான் தோற்றால், டெல்லி அணி கொல்கத்தாவை வீழ்த்த வேண்டும். மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களின் கடைசிப் போட்டியில் தோற்க வேண்டும். ராஜஸ்தான் தற்போது ஒரு நல்ல நிகர ரன் ரேட்டை கொண்டிருப்பதால், இது டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா 14 புள்ளிகளுடன் இருக்க வழிவகுக்கும்.
பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் செல்ல வேண்டுமெனில், ராஜஸ்தான் ராயல்ஸ் தங்களது கடைசிப் போட்டியில் தோற்க வேண்டும். மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்த வேண்டும். இதன் மூலம் பஞ்சாப் 15 புள்ளிகளைப் பெறும், மற்ற அணிகள் குறைவான புள்ளிகளைப் பெறும். இருப்பினும், கொல்கத்தாவும் வெற்றி பெற்றால், இரு அணிகளும் தலா 15 புள்ளிகளைப் பெறும். மேலும் நிகர ரன் ரேட் அடிப்படையில் யார் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்பதைத் தீர்மானிக்கும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் செல்ல வேண்டுமென்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தங்களது இறுதிப் போட்டிகளில் தோற்க வேண்டும். கொல்கத்தா அணி, டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தினால், அது கொல்கத்தாவின் பிளேஆஃப் இடத்தை உறுதி செய்யும். இருப்பினும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் வெற்றி பெற்றால், நிகர ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறும்.
ALSO READ: மீண்டும் ருதுராஜ் அதே தவறு.. கடும் நடவடிக்கை எடுத்த பிசிசிஐ!
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
டெல்லி அணியின் கடைசி லீக் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெறுகிறது. டெல்லி அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்த வேண்டும். மேலும், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் தங்களது கடைசிப் போட்டிகளில் தோற்க வேண்டும். இருப்பினும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கொல்கத்தாவை ஒரு பெரிய வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டியிருக்கும். ஏனெனில், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய இரு அணிகளும் தலா 14 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், நிகர ரன் ரேட் அடிப்படையில் டெல்லியை விட ராஜஸ்தான் இன்னும் வெகு தொலைவில் முன்னணியில் உள்ளது. எனவே, இந்தக் கணக்கீட்டின்படி, டெல்லி அணி கொல்கத்தாவை ஒரு பெரிய வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.