AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: அவசரமாக ராஞ்சி திரும்பிய தோனி.. ஐபிஎல்லில் இருந்து விரைவில் ஓய்வா?

MS Dhoni Return Ranchi: கடந்த 2026 மே 18ம் தேதி சேப்பாக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 13வது போட்டியில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எஸ். தோனி அந்தப் போட்டிக்காக அணியுடன் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு சென்றார். ஆனால், அன்றும் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவில்லை.

IPL 2026: அவசரமாக ராஞ்சி திரும்பிய தோனி.. ஐபிஎல்லில் இருந்து விரைவில் ஓய்வா?
மகேந்திர சிங் தோனி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 May 2026 16:41 PM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) கடைசி லீக் கட்டப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று அதாவது 2026 மே 21ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சிஎஸ்கே அணியின் கடைசி போட்டியில் எம்.எஸ்.தோனி தனது ரசிகர்களாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், போட்டிக்கு முன்னதாக வெளியான ஒரு தகவலின்படி, எம்.எஸ்.தோனி (MS Dhoni) பாதியிலேயே தனது சொந்த ஊரான ராஞ்சிக்குத் திரும்பிவிட்டார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.. அப்படியென்றால், தோனி தொடரின் பாதியிலேயே அமைதியாக சிஎஸ்கே அணியை விட்டு விலகி, ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா என்ற கேள்வியையும் ரசிகர்கள் மனதில் தோன்றுகிறது. இந்தநிலையில், தோனியின் சொந்த ஊர் திரும்பியதன் காரணத்தை ஆராய்வோம்.

ALSO READ: கோபத்தில் ஹர்திக் பாண்ட்யா செய்த செயல்.. பிசிசிஐ அபராதம் விதிப்பு..!

எம்.எஸ். தோனி சீசனின் பாதியிலேயே ராஞ்சிக்கு ஏன் திரும்பினார்..?

கடந்த 2026 மே 18ம் தேதி சேப்பாக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 13வது போட்டியில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எஸ். தோனி அந்தப் போட்டிக்காக அணியுடன் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு சென்றார். ஆனால், அன்றும் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவில்லை. கிடைத்த தகவலின்படி, கடைசி லீக் போட்டிக்கு முன்பு கட்டைவிரல் காயம் காரணமாக தோனி ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றால் எம்.எஸ்.தோனி மீண்டும் அணியில் இணைவார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் இன்னும் ஓய்வு பெறவில்லை என்பது தெளிவாகிறது.

ஒன்றன்பின் ஒன்றாக காயங்கள்:


ஐபிஎல் 2026 சீசனின் தொடக்கத்தில் தோனிக்கு ஏற்பட்ட கால் தசை காயம் காரணமாக, அவரால் ஒரு போட்டியில் கூட விளையாட முடியவில்லை. கடந்த 2026 மார்ச் 28ம் தேதி சென்னை அணி வெளியிட்ட ஒரு அறிவிப்பில், கால் தசை காயம் காரணமாக தோனி இரண்டு வாரங்கள் வரை விளையாடாமல் இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்தக் காயம் காரணமாக, எம்.எஸ்.தோனி ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் லீக் போட்டிகளில் விளையாடவில்லை. ஐபிஎல் 2026 சீசனின் பிற்பகுதியில் அவருக்கு இரண்டாவது கட்டைவிரல் காயம் ஏற்பட்டது. சென்னை அணி பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற்றால், தோனி மீண்டும் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ALSO READ: ஜிடியை வீழ்த்துவது மட்டும் போதாது.. சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல இதுதான் வழி..!

எம்.எஸ். தோனியின் ஐபிஎல் வாழ்க்கை

எம்.எஸ். தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை 278 போட்டிகளில் விளையாடியுள்ளார். 242 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, 38.30 சராசரி மற்றும் 137.45 ஸ்டிரைக் ரேட்டுடன் 5439 ரன்கள் எடுத்துள்ளார். இந்தக் காலகட்டத்தில், தோனி 24 அரை சதங்களை அடித்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 84* ஆகும்.

Follow Us