AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: அமெரிக்கா, மெக்சிகோ, கனடா… ஃபிஃபாவில் வெளியேறிய போட்டியை நடத்தும் 3 நாடுகள்!

FIFA World Cup 2026 Elimination: 2026 ஃபிஃபா உலகக் கோப்பையானது, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 போட்டியை நடத்தும் உரிமையை பெற்றிருந்தது. ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு உலகக் கோப்பையை 3 நாடுகள் நடத்துவது இதுவே முதல் முறையாகும். ஆனால், அந்த 3 நாடுகளின் பயணமும் தற்போது முடிவடைந்து, அவை போட்டியிலிருந்து வெளியேறிவிட்டன.

FIFA World Cup 2026: அமெரிக்கா, மெக்சிகோ, கனடா… ஃபிஃபாவில் வெளியேறிய போட்டியை நடத்தும் 3 நாடுகள்!
ஃபிஃபா உலகக் கோப்பை
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Jul 2026 18:17 PM IST

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் (FIFA World Cup 2026) காலிறுதிக்கு முந்தைய சுற்றிலிருந்து 3 போட்டி நடத்தும் நாடுகளும் வெளியேற்றப்பட்டுள்ளன. இது அந்த நாடுகளை சேர்ந்த ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டி தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறியுள்ளது. அதேநேரத்தில் போட்டியை நடத்தும் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா (USA) ஆகிய நாடுகள் இந்தக் காலிறுதிப் போட்டியில் விளையாடப்போவது இல்லை. இன்று அதாவது 2026 ஜூலை 7ம் தேதி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் பெல்ஜியம் அணி அமெரிக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, போட்டித் தொடரிலிருந்து வெளியேற்றியது. இதன் மூலம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதியில் விளையாட வேண்டும் என்ற அமெரிக்காவின் கனவும் முடிவுக்கு வந்தது.

வெளியேறிய அமெரிக்கா:

ALSO READ: ஃபிஃபா 2026-ல் அதிக கோல்கள் அடித்த 5 வீரர்கள்.. பட்டியலில் இடம்பெறாத ரொனால்டோ, நெய்மர்!

கனடாவும் வெளியேற்றம்:

போட்டியை நடத்தும் மற்றொரு நாடான கனடா, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் நாடாகும். கடந்த 2026 ஜூலை 4ம் தேதி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மொராக்கோ, கனடாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் மொராக்கோ 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, கனடா காலிறுதிக்கு முன்னேறுவதைத் தடுத்தது. இதன்மூலம், கனடாவில் உலகக் கோப்பை கனவும் தரைமட்டமானது.

காலிறுதிப் போட்டிக்கான போட்டியில் இருந்து வெளியேறிய மெக்சிகோ:

கனடாவைத் தொடர்ந்து, போட்டியை நடத்தும் நாடான மெக்சிகோவும் ஃபிஃபா உலகக் கோப்பை காலிறுதிப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியது. இங்கிலாந்து மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையேயான 16-வது சுற்றுப் போட்டியானது நேற்று அதாவது 2026 ஜூலை 6ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

ALSO READ: அமெரிக்க வீரருக்கு தடை.. போன் போட்ட டிரம்ப்.. விளையாட ஃபிஃபா அனுமதித்ததால் சர்ச்சை!

2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 48 நாடுகள் பங்கேற்பு:

2026 ஃபிஃபா உலகக் கோப்பையானது, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 போட்டியை நடத்தும் உரிமையை பெற்றிருந்தது. ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு உலகக் கோப்பையை 3 நாடுகள் நடத்துவது இதுவே முதல் முறையாகும். ஆனால், அந்த 3 நாடுகளின் பயணமும் தற்போது முடிவடைந்து, அவை போட்டியிலிருந்து வெளியேறிவிட்டன. அதன்படி, இந்த முறை விருந்தினராக வந்து விளையாடும் ஏதேனும் ஒரு நாடுதான் பட்டத்தை வெல்லும் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. முதல் முறையாக 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் 48 நாடுகள் பங்கேற்றன என்பதையும், இப்போட்டியானது இந்த 3 நாடுகளின் 16 நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Follow Us