AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: சஞ்சு சாம்சன் அணியிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டாரா? பிசிசிஐ விளக்கம்!

Sanju Samson Dropped: சமீபத்திய போட்டிகளில் சஞ்சு சாம்சனின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்த பேச்சு வலுப்பெற்றுள்ளது. அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் சஞ்சு சாம்சன் முறையே 0 மற்றும் 5 ரன்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தார்.

Team India: சஞ்சு சாம்சன் அணியிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டாரா? பிசிசிஐ விளக்கம்!
சஞ்சு சாம்சன்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Jul 2026 14:57 PM IST

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் (Sanju Samson) பெயர் இடம்பெறாததை அடுத்து, அணியிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டாரா என்ற கேள்விகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வந்தனர். இருப்பினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தற்போது சஞ்சு சாம்சன் நீக்கம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளது. பிசிசிஐயின் கூற்றுபடி, சஞ்சு சாம்சன் இந்திய அணியிலிருந்து நீக்கப்படவில்லை, மாறாக, பரபரப்பான சர்வதேச போட்டி அட்டவணை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: நெருங்கும் ஒருநாள் தொடர்.. இங்கிலாந்தில் காலடி வைத்த ரோஹித்.. வைரலாகும் தீவிர பயிற்சி வீடியோ!

பிசிசிஐ விளக்கம்:

ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அதாவது 2026 ஜூலை 6ம் தேதி அறிவிக்கப்பட்டது. பிரப்சிம்ரன் சிங், அபிஷேக் சர்மா மற்றும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக சேர்க்கப்பட்டனர். இருப்பினும், இந்த பட்டியலில் சஞ்சு சாம்சனின் பெயர் சேர்க்கப்படவில்லை. இது தேர்வாளர்களின் முடிவு குறித்து கேள்விகளை எழுப்பியது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பில்லை என்று பிசிசிஐ-யின் மூத்த வட்டாரம் ஒன்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது. எனவே, அவரை அணியுடன் அனுப்புவதற்குப் பதிலாக, அவருக்கு ஓய்வளித்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டது.

சஞ்சு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவாரா?

வருகின்ற 2026 செப்டம்பரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் சஞ்சு இடம்பெற்றுள்ளார். இருப்பினும், சஞ்சு சாம்சன் ஜிம்பாப்வேயில் விளையாடப் போவதில்லை என்பதால், அவரை இந்திய அணியுடன் அழைத்துச் செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

சஞ்சுவை நீக்க காரணம் என்ன?

சமீபத்திய போட்டிகளில் சஞ்சு சாம்சனின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்த பேச்சு வலுப்பெற்றுள்ளது. அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் சஞ்சு சாம்சன் முறையே 0 மற்றும் 5 ரன்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தார். தொடர்ச்சியாக 3 போட்டிகளில் மோசமாக விளையாடியதால், இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

இருப்பினும், தனது சமீபத்திய மோசமான ஆட்டத்திற்கு முன்பு, சஞ்சு சாம்சன் 2026 டி20 உலகக் கோப்பையில் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். நாக்-அவுட் போட்டிகளில் முக்கியமான 97, 89 மற்றும் 89 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) அடித்து இந்தியாவின் வெற்றிக்கு சஞ்சு சாம்சன் முக்கியப் பங்காற்றினார். இந்த ஆட்டத்திற்காக, சாம்சன் தொடரின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ALSO READ: கேப்டனாக தொடரும் ஷ்ரேயாஸ்.. சாம்சன் நீக்கம்.. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு!

அதன்பிறகு சஞ்சு சாம்சன், ஐபிஎல் 2026 தொடரில் 14 போட்டிகளில் 477 ரன்கள் எடுத்தார். இருப்பினும், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடக்கப் போட்டிகளில் அவரது பேட்டிங் சோபிக்கவில்லை. ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியது மோசமான ஃபார்ம் காரணமாக அல்ல, மாறாக அவரது ஓய்வு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் காரணமாகவே என்று பிசிசிஐ தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.

Follow Us