டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு, இஎஸ்ஐ வசதி – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் ஜூலை 7, 2026 இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளதாகவும், அடுத்த மாதத்தில் இருந்து ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்தார்.
சென்னை, ஜூலை 7: சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் ஜூலை 7, 2026 இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளதாகவும், அடுத்த மாதத்தில் இருந்து ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு இஎஸ்ஐ வசதி என்ற கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பாட்டிலுக்கு ரூ.10 வசூல் புகார் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு, இஎஸ்ஐ வசதி
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ் பேசியதாவது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுவரை டாஸ்மாக்கில் இப்படியொரு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது இல்லை. டாஸ்மாக் ஊழியர்களுக்கு இஎஸ்ஐ வசதி என்ற கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இனி மதுபானங்களை எம்ஆர்பி விலையில் ஊழியர்கள் விற்க வேண்டும் என்பதற்காக இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிக்க : முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை கோரிய வழக்கு.. கொந்தளித்த உச்சநீதிமன்றம்.. நடந்தது என்ன?




மேலும் பேசிய அவர், ஏற்கனவே டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.553.72 கோடி ஊதியமாக தரப்படுகிறது. ஊதிய உயர்வு மூலம் ரூ. 110.74 கோடி கூடுதல் செலவாகும். டாஸ்மாக் ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். இனி பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றார்.
‘பாட்டிலுக்கு கூடுதலாக வசூலித்தால் பணிநீக்கம்’
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் மதுபானங்களின் விலை உயருமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “மதுபானங்களின் விலை உயராது என்றார். மேலும், 21 வயதுக்கு உட்பட்டோரை பப் உள்ளிட்டவற்றில் அனுமதித்தால் உரிமம் ரத்து செய்யப்படும். தற்போது செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களுக்கு இரண்டு மாத நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இனிமேல் டாஸ்மாக் கடைகளில் பணியாளர் மீது கூடுதல் விலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தால் பணிநீக்கம் வரை நடவடிக்கை இருக்கும். இதுவரை 40க்கும் மேற்பட்டோரை தற்போது வரை பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெற்றதால் சஸ்பெண்ட் செய்துள்ளோம். என்றார்.
இதையும் படிக்க : “திமுகவுடன் நட்பு தொடர்கிறது.. ஆனால்”.. பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!!
மேலும் பேசிய அவர், இனி மதுபானங்களை MRP விலையில் ஊழியர்கள் விற்க வேண்டும் என்பதற்காக இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மது பாட்டில்களை அனுப்பும் நிறுவனங்களே பெட்டிகளை இறக்கி வைப்பதற்கான செலவையும் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.வாடகை பிரச்னைகளையும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் அவற்றையும் தீர்க்க போகிறோம் என்று பேசினார்.