Viral Video : வயநாட்டில் கண் இமைக்கும் நேரத்தில் சூரையாடிய நிலச்சரிவு.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
Horrifying Land Slide In Wayand | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், கேரள (Kerala) மாநிலம், வயநாட்டில் (Wayanad) ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடும் காட்சிகள் அடங்கும் அந்த வீடியோ காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் விதமாக உள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி பகுதிக்கு அருகே உள்ள கல்லடி என்ற பகுதியில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கல்லடி பகுதியில் சுரங்க சாலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மீனாட்சி பாலம் அருகே மண் கொட்டப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில், அந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.




இதையும் படிங்க : Viral Video : ஒரு நாள் வருமானமே போச்சு.. செயலி மூலம் இ ரிக்ஷாவை நிறுத்தியதால் கண்ணீர் மல்க பேசிய நபர்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
Watch the moment a massive landslide struck a tunnel construction site near Meppady in the Wayanad district of Kerala, India.
Three people are reported dead, and six have been rescued. Rescue operations are ongoing, and multiple others are feared trapped. pic.twitter.com/4upqeacEaF
— T_CAS videos (@tecas2000) July 7, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மேடு பகுதியில் இருந்து பயங்கர சத்தத்துடன் மண் சரிகிறது. அதனை கண்டு அந்த பகுதியில் இருக்கு மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுகின்றன. ஆனால், கண் இமைக்கு நேரத்தில் சரியும் மண் அந்த பகுதியில் இருந்த வீடுகள், பொதுமக்கள், வாகனங்கள் என அனைத்தையும் சூரையாடிவிடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : 5.50 ஆண்டுகள் விசுவாசம்.. நொடி பொழுதில் பணி நீக்கம்.. டெல்லி பெண் வெளியிட்ட வீடியோ!
இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த விபத்தில் மண்ணுக்கு அடியில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அ திகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.