AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : முதுமையிலும் மாறாத காதல்.. நிலநடுக்கத்தின் போது மனைவியை பாதுகாத்த முதியவர்!

Elderly Man Holds His Elderly Wife During Earthquake | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில், முதியவர் ஒருவர் தனது மனைவியின் கைகளை பிடித்துக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : முதுமையிலும் மாறாத காதல்.. நிலநடுக்கத்தின் போது மனைவியை பாதுகாத்த முதியவர்!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Jun 2026 19:47 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். உலக அளவில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் வெனிசுலாவில் (Venezuela) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது முதியர் ஒருவர் தனது மனைவியை பாதுகாப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதுமையிலும் மாறாத காதல் – மனைவியை பாதுகாத்த முதியவர்

நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவு சம்பவங்கள் உலகெங்கிலும் அவ்வப்போது நடந்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தான், அத்தகைய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாக தொடங்கும். அந்த வகையில் தான் வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தின் போது முதியவர் ஒருவர் தனது மனைவியை பாதுகாப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : பால்கனியில் திறந்த வெளியில் கழிவறை.. அதிர்ச்சியை ஏற்படுத்திய பெங்களூரு பிளாட்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், முதியவர்கள் இருவர் வீட்டில் அமர்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு அந்த வீடு குலுங்க தொடங்குகிறது. அதன் காரணமாக அந்த மூதாட்டி அச்சமடைகிறார். உடனே அந்த முதியவர் தனது மனைவியின் அருகே சென்று அவரது கைகளை பிடித்துக்கொள்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : தாயின் ஐபோனை குளத்தில் வீசிய குழந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், மனிதர்கள் இப்படிதான் காதலிக்க வேண்டும் என பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us