AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : ஆஸ்திரேலியா சுற்றுலா பயணியிடம் முத்தம் கேட்டு தொல்லை கொடுத்த நபர்.. வைரல் வீடியோ!

Boy Asks Kiss To Australia Tourist | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவரிடம் முத்தம் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : ஆஸ்திரேலியா சுற்றுலா பயணியிடம் முத்தம் கேட்டு தொல்லை கொடுத்த நபர்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Jun 2026 22:51 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அதில் சில வீடியோக்கள் உலகில் நம்மை சுற்றி நடைபெறும், மோசமான மற்றும் குற்ற சம்பவங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இருக்கும். அந்த வகையில், இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஆஸ்திரேலியா சுற்றுலா பயணி ஒருவரிடம், இந்திய சிறுவன் ஒருவர் முத்தம் கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சுற்றுலா பயணியிடம் முத்தம் கேட்ட சிறுவன்

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் தங்களது பயணத்தை வீடியோவாக பதிவு செய்து, தங்களுக்கு நடைபெற்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் சோகமான சம்பவங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணியிடம் சிறுவன் ஒருவர் முத்தம் கொடுக்கும்படி தொந்தரவு செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : நாய் குட்டியை மரத்தின் மீது தூக்கிச் சென்ற குரங்கு.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த ஆஸ்திரேலியா சுற்றுலா பயணி சாலையில் நடந்து செல்கிறார். அவரிடம் சிறுவன் ஒருவர் தனக்கு முத்தம் கொடுக்கும்படி கேட்கிறார். ஆனால், சுற்றுலா பயணி சிறுவனுக்கு முத்தம் கொடுக்க மறுக்கிறார். இருப்பினும் அந்த சிறுவன் விடாது முத்தம் கொடுக்கும்படி கேட்கிறார். இதனால், ஆத்திரமடையும் அந்த சுற்றுலா பயணி அந்த இடத்தில் இருந்து வேகமாக செல்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

Follow Us