AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : ஒரு நாள் வருமானமே போச்சு.. செயலி மூலம் இ ரிக்‌ஷாவை நிறுத்தியதால் கண்ணீர் மல்க பேசிய நபர்!

Man Spoke With Tears For His e Rikshaw Stopped | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மொபைல் செயலியை பயன்படுத்தி தனது இ ரிக்‌ஷா நிறுத்தப்பட்டதாக ஒருவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : ஒரு நாள் வருமானமே போச்சு.. செயலி மூலம் இ ரிக்‌ஷாவை நிறுத்தியதால் கண்ணீர் மல்க பேசிய நபர்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 03 Jul 2026 17:27 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் கவனத்தையும், பாராட்டுக்களையும் பெறும். ஆனால், சில வீடியோக்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி, பேசுபொருளாக மாறும். அந்த வகையில், இளைஞர்கள் மொபைல் செயலிகளை பயன்படுத்தி இ ரிக்‌ஷாக்களை நிறுத்தி விளையாடுவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட இ ரிக்‌ஷா ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கண்ணீர் உடன் பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

மொபைல் செயலி மூலம் இ ரிக்‌ஷாக்களை நிறுத்தும் இளைஞர்கள்

சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக ஒரு டிரெண்ட் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது, மொபைல் செயலிகள் மூலம் இ ரிக்‌ஷாக்களை நிறுத்தி அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது. இதனை பல இளைஞர்கள் விளையாட்டாக செய்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், அவ்வாறு இளைஞர்கள் இ ரிக்‌ஷாவை நிறுத்தியதன் மூலம் பாதிகப்பட்ட ஒருவர் கண்ணீர் மல்க பேசும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : முதுமையிலும் மாறாத காதல்.. நிலநடுக்கத்தின் போது மனைவியை பாதுகாத்த முதியவர்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இ ரிக்‌ஷா ஓட்டும் நபர் ஒருவர் தனது வாகனத்தில் அமர்ந்துக்கொண்டு கண்ணீர் மல்க பேசுகிறார். தனது வாகனம் திடீரென நின்றுவிட்டதாகவும், அதனால் அவரது அன்றைய தினத்தின் வருமானவே இல்லாமல் போய்விட்டதாக அவர் கூறுகிறார்.

இதையும் படிங்க : Viral Video : வெறும் 3 மணி நேரத்தில் ரூ.2,350 சம்பாதித்த இளைஞர்.. என்ன செய்தார் தெரியுமா?.. வைரலாகும் வீடியோ!

அவர் கண்ணீர் மல்க பேசும் அந்த வீடியோ பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அது குறித்து ஆத்திரமடைந்த சிலர் இத்தகைய செயல்களை செய்யும் நபர்களுக்கு உரிய தண்டை வழங்கப்பட வேண்டும் என்றும், இது வன்மையாக கண்டித்தக்க நிகழ்வு என்றும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us