AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : வெறும் 3 மணி நேரத்தில் ரூ.2,350 சம்பாதித்த இளைஞர்.. என்ன செய்தார் தெரியுமா?.. வைரலாகும் வீடியோ!

Young Man Earns 2350 Rupees Within 3 Hours | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் பொட்டு வைத்து வெறும் மூன்று மணி நேரத்தில் ரூ.2,350 சம்பாதித்துள்ளார்.

Viral Video : வெறும் 3 மணி நேரத்தில் ரூ.2,350 சம்பாதித்த இளைஞர்.. என்ன செய்தார் தெரியுமா?.. வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Jun 2026 17:10 PM IST

சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் சில சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அதில் சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் வெறும் மூன்றே மணி நேரத்தில் ஆயிரங்களில் பணம் சம்பாதித்தாக வீடியோ ஒன்று பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தான், தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மூன்று மணி நேரத்தில் ரூ.2,350 சம்பாதித்த இளைஞர்

இந்தியா கடவுள் நம்பிக்கை மிகுந்த நாடு. இந்தியாவில் உள்ள மக்கள் வெவ்வேறு மதத்தை பின்பற்றுவராக இருந்தாலும், வெவ்வேறு தெய்வங்களை வழிபடுபவர்களாக இருந்தாலும் அவர்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னதாக கடவுளை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக, கோயில்கள் மற்றும் புனித ஸ்தலங்களில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். அத்தகைய புனித ஸ்தலமான ரிஷிகேஷில் இளைஞர் ஒருவர் வெறும் 3 மணி நேரத்தில் ரூ.2,350 சம்பாதித்துள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : தாயின் ஐபோனை குளத்தில் வீசிய குழந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Tan_E (@mrtan.e_)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பாரம்பரிய உடை அணிந்துக்கொண்டு ரிஷிகேஷில் உள்ள சில முக்கிய பகுதிகளை சுற்றி வருகிறார். அப்போது அவர் அங்கிருக்கும் மக்களிடம் பொட்டு வைத்துக்கொள்ளும்படி கேட்கிறார். ஆரம்பத்தில் பலரும் மறுக்கும் நிலையில், நேரம் செல்ல செல்ல பலரும் அவரிடம் வந்து பொட்டு வைத்துக்கொள்கின்றனர். அவ்வாறு பொட்டு வைத்ததன் மூலம் மட்டுமே, வெறும் 3 மணி நேரத்தில் அவர் ரூ.2,350 சம்பாதித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : Man Vs Snake.. வரப்பில் பாம்புடன் சண்டை போட்ட நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தினமும் இதுபோல மூன்று மணி நேரம் பொட்டு வைத்து ஒரு மாதத்திற்கு ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

Follow Us