முதலீட்டு மோசடியில் சிக்கி ரூ1.23 கோடியை இழந்த வங்கி அதிகாரி.. ஷாக் சம்பவம்!
Bank Officer Lost 1.23 Crores In Investment Scam | இந்தியாவில் முதலீட்டு மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர் முதலீட்டு மோசடியில் சிக்கி ரூ.1.23 கோடி பணத்தை இழந்துள்ளார்.
புதுச்சேரி, ஜூன் 26 : இந்தியாவில் (India) முதலீட்டு மோசடி (Investment Scam) சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியில் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ஆன்லைன் வர்த்தகத்தில் வங்கி அதிகாரி ஒருவர் ரூ.1.23 கோடி பணத்தை இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் வந்த சிக்கல்
பாகூர் பகுதியை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அதனை நம்பிய அந்த வங்கி அதிகாரி, முதலில் சிறிய தொகையை முதலீடு செய்துள்ளார். அதில் அவருக்கு பல மடங்கு லாபம் கிடைத்துள்ளது. அதனை நம்பி அவர் மேலும் அதிகமாக முதலீடு செய்துள்ளார்.
இதையும் படிங்க : முதலீட்டாளரிடம் லஞ்ச கேட்டதாக புகாரில்லை.. முதலீட்டை ஈர்ப்பதில் அசத்தல்.. திமுக அரசை பாராட்டி தள்ளிய ஆந்திரா அமைச்சர்!




ரூ.1 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளார்
அதில லாபத்திற்கு ஆசைப்பட்டு அந்த வங்கி அதிகாரி தன்னிடம் இருந்த பணத்தை 20 தவணைகளாக முதலீடு செய்துள்ளார். அதாவது, மொத்தமாக அவர் ரூ.1 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளார். அவ்வாறு அவர் செய்த முதலீட்டு பல கோடி லாபம் வந்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது. அப்போது அவர் அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரால் பணத்தை மாற்ற முடியவில்லை.
இதையும் படிங்க : பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2026: சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கி அதிகாரியே மோசம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.