AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மனைவியை கொலை செய்து நாடகமாடிய ராணுவ வீரர்.. கைது செய்த போலீஸ்!

Army Officer Killed Wife | பஞ்சாபில் மனைவியை திட்டமிட்டு கொலை செய்த ராணுவ அதிகாரி விபத்து போல சித்தரித்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் சகோதரர், அது விபத்து இல்லை என்றும் திட்டமிட்ட கொலை என்றும் புகார் அளித்த நிலையில், அது தொடர்பான விசாரணையில் உண்மை வெளியே வந்துள்ளது.

மனைவியை கொலை செய்து நாடகமாடிய ராணுவ வீரர்.. கைது செய்த போலீஸ்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Jun 2026 21:27 PM IST

சண்டிகர், ஜூன் 25 : பஞ்சாப் (Punjab) மாநிலத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். இறந்த பெண்ணின் சகோதரர், தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவு, அது விபத்து மரணம் இல்லை என்றும் திட்டமிட்டு செய்த கொலை என்றும் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், இந்த சம்பத்தின் பின்னணியை கண்டுபிடித்துள்ளனர்.

மாற்று சமூகத்து பெண்ணை காதல் திருமணம் செய்த நபர்

பஞ்சாப் மாநிலம், மான்சா மாவட்டத்தில் உள்ள பாஜோவலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹேப்பி சிங். ராணுவ வீரரான இவர், மாற்று சமூகத்தை சேர்ந்த ரமந்தீப் கவுர் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும் இருவரும் 2024 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு!

பெற்றோருடன் தகராறு – தம்பதிக்கு இடையே மன கசப்பு

திருமணத்திற்கு பிறகும் ஹேப்பி சிங்கின் பெற்றோர், ரமந்தீப் கவுரை தங்களது மருமகளாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இதன் காரணமாக தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதன் காரணமாக இந்த தம்பதி, தங்களது சொந்த ஊரை விட்டுவிட்டு, சங்கரூர் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க : காதலன் உடன் இணைந்து வருங்கால கணவரை கொலை செய்த பெண்.. பகீர் சம்பவம்!

திட்டமிட்டு மனைவியை கொலை செய்த ராணுவ வீரர்

ஆனால், கணவன் மனைவி இடையே சிக்கல் அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. ஹேப்பி சிங், தனது மனைவியுடன் வாழ விருப்பம் இல்லாமல் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தான், மனைவியை கொலை செய்ய ஹேப்பி சிங் முடிவு செய்துள்ளார். அதன்படி, பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா  மாவட்டத்தில் உள்ள பசியானா பாலத்திற்கு மனைவியை காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

அதற்கு அருகே இருக்கும் பக்ரா கால்வாயில் உள்ள ஆற்று நீரில் காரை வேண்டுமென்றே கவிழ்த்துள்ளார். பிறகு காரில் இருந்தபடியே தனது மனைவியை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். பின்னர் நீச்சல் அடித்து அவரது உயிரை காப்பாற்றிக்கொண்டுள்ளார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அந்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், உண்மை வெளியே வந்துள்ளது.

Follow Us