காதலன் உடன் இணைந்து வருங்கால கணவரை கொலை செய்த பெண்.. பகீர் சம்பவம்!
Young Woman Killed Her Fiance | மகாராஷ்டிராவில் இளம் பெண் ஒருவர் தனது வருங்கால கணவருடன் டிரெக்கிங் சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் தனது காதலன் உடன் இணைந்து தனது வருங்கால கணவரை 400 அடி பள்ளத்தில் தள்ளி கொலை செய்துள்ளார்.
புனே, ஜூன் 23 : மகாராஷ்டிராவில் (Maharashtra) காதலன் உடன் இணைத்து, இளம் பெண் தனது வருங்கால கணவரை பள்ளத்தில் தள்ளி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டிரெக்கிங் செல்லும்போது செல்ஃபி எடுத்த நிலையில், கால் தவறி பள்ளத்தில் விழுந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இளம் தொழிலதிபர் தனது வருங்கால மனைவியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
400 அடி பள்ளத்தில் விழுந்து பலியான இளம் தொழிலதிபர்
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் உள்ள ககுன்ஜே பகுதியை சேர்ந்தவர் கேதன் விஷால் அகர்வால். 26 வயதாகும் இவர், இளம் தொழிலதிபர் ஆவார். இவர் ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநராகவும் இருந்து வந்துள்ளார். மலையேற்ற வீரரான இவர் ஜூன் 18, 2026 அன்று புனே நகரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த லோஹாகத் கோட்டை பகுதிக்கு டிரெக்கிங் சென்றுள்ளார். அப்போது புகைப்படம் எடுக்கும்போது சுமார் 400 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இதையும் படிங்க : உபி பயிற்சி மைய தீ விபத்து.. 15 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி!
காதலன் உடன் இணைந்து வருங்கால கணவரை கொன்ற இளம் பெண்
விஷால் தனது வருங்கால மனைவியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, வருங்கால மனைவி சியா மற்றும் அவரது இரண்டு நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது தான் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால், விசாரணையில் இந்த சம்பவம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : கர்ப்பிணி மனைவியை காலை உதைத்து கொலை செய்த கணவன்.. அதிர்ச்சி சம்பவம்!
போலீசார் கூறிய அதிர்ச்சி தகவல்கள்
இது குறித்து போலீசார் கூறும்போது, இந்த விவகாரத்தில் விஷாலின் வருங்கால மனைவி சியா மற்றும் அவருடைய காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சியாவும், அவருடைய காதலரும் இணைந்து அவரை உள்நோக்கத்துடன் பள்ளத்தகாக்கில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளனர்.