AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கர்ப்பிணி மனைவியை காலை உதைத்து கொலை செய்த கணவன்.. அதிர்ச்சி சம்பவம்!

Man Kicked Pregnant Wife | மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கர்ப்பிணியை அவரது கணவர் தனது தாயாருடன் சேர்ந்து எட்டி உதைத்த நிலையில், படுகாயமடைந்த கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கர்ப்பிணி மனைவியை காலை உதைத்து கொலை செய்த கணவன்.. அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 Jun 2026 23:51 PM IST

மும்பை, ஜூன் 22 : மாராட்டிய (Maharashtra) மாநிலம், மும்பையில் (Mumbai) கணவன் தாக்கியதில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கர்ப்பிணியின் கணவர் மற்றும் அவரது தாயார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கணவன் தாக்கியதில் கர்ப்பிணி மனைவி உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கணவன் தாக்கியதில் கர்ப்பிணி பரிதாப பலி

மகாராஷ்ரா மாநிலம், தானே மாவட்டம், முப்ரா பகுதியை சேந்த இளைஞர் ஒருவருக்கு திருமணமாகி மனைவி இருந்துள்ளார். அவர் கர்ப்பமாக இருந்த நிலையில், கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியுடன் அந்த கர்ப்பிணியின் மாமியார், அதாவது கணவனின் தாயாரும் உடன் வசித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : NEET UG 2026 மறுதேர்வு இன்று.. புதிய கட்டுப்பாடுகளும், வழிகாட்டுதல்களும் முழுவிவரம்!

கர்ப்பிணியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த தாய், மகன்

இந்த நிலையில், அடமானம் வைக்கப்பட்ட நகையை மீட்பது தொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்னை எழுந்துள்ளது. அதுமட்டுமன்றி, குழந்தை வேண்டாம் என அந்த பெண்ணின் கணவர் தொடர்ந்து கூறி வந்துள்ளார். கருவை கலைக்கவும் அவர் வலியுறுத்தி வந்துள்ளார். அவரின் கருத்துக்கு அவரது தாயும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளார். இதன் காரணமாக, தாய், மகன் இணைந்து இளம் பெண்ணிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதையும் படிங்க : யோகா என்பது ஆற்றலின் ஒளி – யோகா தினக் கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி

இந்த நிலையில் தான் ஜூன் 10, 2026 அன்று கர்ப்பிணியிடம் அவரது கணவர் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது தாயுடன் சேர்ந்து கர்ப்பிணி மனைவியை அவர் எட்டி உதைத்துள்ளார். இதில் தரையில் சரிந்து விழுந்த கர்ப்பிணி படுகாயமடைந்துள்ளார். இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கர்ப்பிணியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us