யோகா என்பது மன நலனுக்கான அறிவியல் – சத்குரு பகிர்ந்த தகவல்
கோவை ஆதியோகி வளாகத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்காகவும், பெங்களூருவில் தேசிய மாணவர் படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்காகவும் யோகா பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன, அதில் கலந்துகொண்டு பேசிய சத்குரு, யோகா மனிதனை முழுமையான திறனுடன் வாழச் செய்கிறது என்றார்.
சர்வதேச யோகா தினமான 2026 ஜூன் 21 அன்று, கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்திலும், பெங்களூருவில் உள்ள சத்குரு சன்னிதியிலும் ஈஷா அறக்கட்டளை சார்பில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவை ஆதியோகி வளாகத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்காகவும், பெங்களூருவில் தேசிய மாணவர் படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்காகவும் யோகா பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன.
இதனுடன், இந்தியா முழுவதும் சுமார் 1,000 இலவச யோகா மற்றும் தியான வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ அமைப்புகள், அரசு துறைகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு பேசிய சத்குரு, யோகா என்பது ஒரு தத்துவம், கொள்கை, நம்பிக்கை அல்லது மதம் அல்ல என்று வலியுறுத்தினார்.
சத்குருவின் சொற்பொழிவு
The International Day of Yoga is a reminder that what we call Yoga is not a philosophy, an ideology, a belief system or a religion. This is the science and technology for inner wellbeing. Whatever your religion, race, caste, creed, gender, these technologies render you to optimal… pic.twitter.com/c2BRC0Ewyw
— Sadhguru (@SadhguruJV) June 21, 2026
மேலும் பேசிய சத்குரு, சர்வதேச யோகா தினம், யோகா பற்றிய உண்மையை நமக்கு நினைவூட்டுகிறது. யோகா என்பது மனிதனின் மன நலனுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பமாகும். எந்த மதம், இனம், சாதி, பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் யோகா மனிதனை முழுமையான திறனுடன் வாழச் செய்கிறது,” என்று சத்குரு கூறினார்.
மேலும், யோகா உடல், மனம், உணர்வு, அறிவாற்றல் மற்றும் உயிர்சக்தி ஆகிய அனைத்திலும் உச்ச செயல்திறனை வழங்குவதோடு, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் தனித்துவமான திறமையையும் வெளிக்கொண்டு வர உதவுகிறது என்றார். மனித குலத்தின் நலனுக்கான சக்திவாய்ந்த கருவியாக யோகா திகழ்கிறது என்றும், உள் அமைதியையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் அறிவியல் முறையாக அதை அனைவரும் அணுக வேண்டும் என்றும் சத்குரு வலியுறுத்தினார்.