AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மழை வேண்டி திருமணம் செய்துக்கொண்ட ஆண்கள்.. ஒடிசாவில் வினோத சம்பவம்!

Rain Marriage Ritual In Odisha | இந்தியாவில் மழை வேண்டி ஒவ்வொரு பகுதியிலும் வித்தியாசமான வேண்டுதல்கள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், ஒடிசாவில் இரண்டு ஆண்கள் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மழை வேண்டி ஆண்கள் திருமணம் செய்துக்கொண்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மழை வேண்டி திருமணம் செய்துக்கொண்ட ஆண்கள்.. ஒடிசாவில் வினோத சம்பவம்!
ஒடிசாவில் திருமணம் செய்துக்கொண்ட ஆண்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Jun 2026 00:09 AM IST

புவனேஷ்வர், ஜூன் 20 : ஒடிசாவில் (Odisha) மழை பெய்ய வேண்டி ஆணுக்கும், ஆணுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மழை பெய்ய வேண்டி மக்கள் நூதன வழிபாடுகள் நடத்துவது வழக்கம். ஓவ்வொரு பகுதிக்கும் இவ்வாறு ஒவ்வொரு விதமான பழக்கங்கள் இருக்கும். அந்த வகையில் ஒடிசாவில் நடைபெற்ற இந்த வினோத திருமணம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மழை பெய்ய வேண்டி ஆணுக்கு ஆணுக்கும் நடந்த திருமணம்

இந்தியாவில் மழை வேண்டி பல வினோதமான திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இந்தியாவின், ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப பல வித்தியாசமான திருமணங்கள் நடைபெறும். அந்த வகையில் தான் ஒடிசாவில், ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கம்ஹரியா கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க : வருங்கால மனைவியுடன் செல்ஃபி எடுத்தபோது விபரீதம்.. 400 அடி பள்ளத்தில் விழுந்து பலியான இளைஞர்.. சோக சம்பவம்!

இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த கிராம மக்கள் மழை வேண்டி காத்திருந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக தான் ஆணுக்கும், ஆணுக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அந்த கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

பாரம்பரிய முறைப்படி ஆண்களுக்கு நடைபெற்ற திருமணம்

கிராமத்தினர் ஆணுக்கும், ஆணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த ஜதின் கதுவா என்ற 29 வயது இளைஞர் மற்றும் கலந்தி நாயக் என்ற 27 வயது இளைஞர் இருவரும் முன்வந்துள்ளனர். இந்த நிலையில், ஜூன் 18, 2026 அன்று மாலை மணமகன் கோலத்தில் இருந்த ஜதின், ஊர்வலமாக சென்று சித்தேஸ்வரி கோயிலை சென்றடைந்தார்.

இதையும் படிங்க : சமையலறைகளில் துருப்பிடித்த மற்றும் உடைந்த கத்திகளைப் பயன்படுத்தத் தடை

அங்கு கலந்தி மணமகள் கோலத்தில் இருந்த நிலையில், இருவருக்கும் ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

Follow Us