வருங்கால மனைவியுடன் செல்ஃபி எடுத்தபோது விபரீதம்.. 400 அடி பள்ளத்தில் விழுந்து பலியான இளைஞர்.. சோக சம்பவம்!
Young Man Died By Falling Into 400 Feet In Pit | மகாராஷ்டிராவில் விஷால் என்ற இளைஞர் தனது வருங்கால மனைவியுடன் டிரக்கிங் சென்றுள்ளார். அப்போது பாறை ஒன்றின் மீது ஏறி செல்ஃபி எடுத்தபோது தவறி விழுந்த அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
புனே, ஜூன் 19 : மராட்டிய (Maharashtra) மாநிலம், புனே (Pune) மாவட்டத்தில் வருங்கால மனைவியுடன் டிரக்கிங் சென்ற இளைஞர், செல்ஃபி எடுக்கும்போது 400 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருங்கால மனைவியின் பிறந்த நாளை கொண்டாட அவர், டிரக்கிங் சென்ற நிலையில், செல்ஃபி எடுக்கும்போது இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், செல்ஃபி எடுக்கும்போது இளைஞர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வருங்கால மனைவியின் பிறந்த நாளை கொண்டாடியபோது விபரீதம்
மராட்டிய மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள மாவல் தாலுக்காவில் உள்ள கஹூன்ஜேவை சேர்ந்தவர் கேதன் விஷால் அகர்வால். 26 வயது ஆகும் இவர், தனது குடுமத்திற்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு நவம்பர் மாதம் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அதற்காக உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையையும் அவர்கள் முன்பதிவு செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் தான், விஷால் தனது வருங்கால மனைவியின் பிறந்த நாளை டிரக்கிங் செய்து கொண்டாட விரும்பியுள்ளார்.
இதையும் படிங்க : இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – டிரம்ப் முக்கிய அறிவிப்பு




செல்ஃபி எடுக்கும்பொது 400 அடி பள்ளத்தில் விழுந்த விஷால்
விஷால் தனது வருங்கால மனைவி மற்றும் இரண்டு நண்பர்களுடன் லோகட் கோட்டைக்கு மலை ஏற சென்றுள்ளார். அப்போது பலத்த காற்று வீசியுள்ளது. இந்த நிலையில் தான், விஷால் தனது வருங்கால மனைவியுடன் இணைந்து ஒரு செங்குத்தான பாறை மீது ஏறி செஃல்பி எடுத்துள்ளார். அப்போது கால் இடறி அருகில் இருந்த 400 அடி பள்ளத்தில் அவர் விழுந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க : நீட் மறுதேர்வை முன்னிட்டு இந்தியாவில் டெலிகிராமுக்கு தற்காலிக தடை: பாவல் துரோவ் எதிர்ப்பு
மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட உடல்
இந்த சமபவம் குறித்து தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் சிவதுர்க் அவசர மீட்புக்குழுவின் உதவியுடன் விஷாலின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் விஷால் உடலை மீட்டு மேலே கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.