AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கண்டித்த ஆசிரியை.. ஏஐ மூலம் ஆபாச வீடியோக்களை உருவாக்கி தொல்லை கொடுத்த மாணவன்!

Student Took Revenge With AI Videos In Telangana | தெலங்கானாவில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் ஆசிரியை திட்டிய நிலையில், ஆசிரியையை பழிவாங்க அவரது புகைப்படங்களை பயன்படுத்தி ஆபாச ஏஐ வீடியோக்களை உருவாக்கி தொல்லை கொடுத்து வந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கண்டித்த ஆசிரியை.. ஏஐ மூலம் ஆபாச வீடியோக்களை உருவாக்கி தொல்லை கொடுத்த மாணவன்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Jun 2026 23:14 PM IST

தெலங்கானா, ஜூன் 18 : செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் மூலம் ஏராளமான மோசடி மற்றும் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் உருவாக்கப்படும் ஆபாச வீடியோக்கள் தொடர்பான குற்ற சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில், தெலங்கானாவில் (Telangana) குறைவான மதிப்பெண் எடுத்ததால் கண்டித்த ஆசிரியையை, மாணவர் ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியை ஏஐ மூலம் சித்தரித்து ஆபாச வீடியோ வெளியிட்ட மாணவர்

தெலங்கானா மாநிலம், அதிலா பாத் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக மாணவர் ஒருவரை ஆசிரியை திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவர் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு ஒன்றை தொடங்கி, அதில் ஆசிரியையை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து வீடியோக்களை வெளியிட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுத்து ஆளான ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : மதுபானம் அருந்திய பின் நடந்தது என்ன? முசோரியில் இளம் பெண் உயிரிழப்பு

புகாரின் அடிப்படையில் பள்ளி மாணவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அதிலாபாத் முதலாவது நகர் காவல் ஆய்வாளர் பி.சுனில்குமார் கூறுகையில், அதிலாபாத் நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 18 வயது மாணவர் ஒருவர் இண்டர் மிடியட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார். அதனால் இயற்பியல் ஆசிரியை மாணவரை கண்டித்துள்ளார்.

இதையும் படிங்க : மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இனி இருமல் மருந்து விற்பனைக்கு தடை.. மத்திய அரசு அறிவிப்பு

இதனால் ஆசிரியை மீது கோபத்தில், 2025 நவம்பர் மாதம் முதல் அந்த மாணவர் ஆசிரியை குறித்த ஆபாச ஏஐ வீடியோக்களை உருவாக்கி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆசிரியை அளித்த புகாரின் அடிப்படையில் மாணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

Follow Us