முறியடிக்கப்படாத வீரேந்திர சேவாக்கின் 15 ஆண்டுகால சாதனை – முறியடிப்பாரா சுப்மன் கில்?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், கேப்டனாக சுப்மன் கில் முதன்முறையாக 150 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார். ஆனால் நீடிக்கும் விரேந்திர சேவாக்கின் 15 ஆண்டு கால சாதனையை அவரால் முறியடிக்க முடியவில்லை. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், கேப்டனாக சுப்மன் கில் முதன்முறையாக 150 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார். இருப்பினும், விராட் மற்றும் ரோஹித்தைப் போலவே, அவராலும் இந்திய கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளாக நீடிக்கும் விரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடிக்க முடியவில்லை. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் கடந்த காலங்களில் சேவாக்கின் முறியடிக்க முயன்றனர். ரோஹித் சர்மா ஒருமுறை மிக அருகில் கூட வந்தார், ஆனால் அது சாத்தியமாகவில்லை.
முறியடிக்கப்படாத வீரேந்திர சேவாக்கின் 15 ஆண்டுகால சாதனை
கடந்த 15 ஆண்டுகளாக யாராலும் முறியடிக்கப்படாத சாதனை ஒன்று முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக்கின் வசமுள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2011 ஆம் ஆண்டு, இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் அவர் 219 ரன்கள் குவித்து ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்
இதையும் படிக்க : IND A vs AFG-A: முத்தரப்பு தொடர் பைனலில் இந்தியா ஏ.. வெளியேறியதா ஆப்கானிஸ்தான் ஏ?




அந்த போட்டியில் விரேந்தர் சேவாக் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் சரமாரியாக விளாசினார். ஒருநாள் போட்டிகளில் இந்திய கேப்டன் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது எது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, சச்சின் டெண்டுல்கர் வசம் இந்தச் சாதனை இருந்தது. அவர் 1999 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். அந்த போட்டியில் அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 186 ரன்கள் எடுத்திருந்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு, விரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடிக்கும் நிலைக்கு ரோஹித் சர்மா மிக அருகில் வந்தார். மெஹாலியில் இலங்கைக்கு எதிராக அணியை வழிநடத்தியபோது அவர் ஆட்டமிழக்காமல் 208 ரன்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு, விராட் கோலி கேப்டனாக இரண்டு முறை 150 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார்.
இதையும் படிக்க : IND vs AFG: சேப்பாக்கத்தில் கடைசி ஒருநாள் போட்டி… ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா..?
ஆனால் விரேந்திர சேவாக்கின் சாதனையை விட வெகு தொலைவிலேயே இருந்தார். விசாகப்பட்டினத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 157 ரன்களும், கேப் டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 160 ரன்களும் அவர் எடுத்தார். விராட் அல்லது ரோஹித்தைக்கூட கில்லால் முந்த முடியவில்லை
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் 154 ரன்களைக் குவித்துள்ளார் . இப்பினும், வீரேந்திர சேவாக்கின் சாதனையை நெருங்குவது ஒருபுறம் இருக்க, விராட் கோலி அல்லது ரோஹித் சர்மாவின் சாதனைகளைக்கூட அவரால் முந்த முடியவில்லை. ஆனால் அவர் கேப்டனாக பல போட்டிகளில் விளையாடுவார் என்பதால் இனி வரும் காலங்களில் சுப்மன் கில் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.