IND vs AFG 2nd ODI: அர்ஷ்தீப், பிரார் தலா 3 விக்கெட்டுகள்.. ஆப்கானிஸ்தானை சுருட்டி தொடரை வென்ற இந்திய அணி!
IND vs AFG 2nd ODI Highlights: முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களில் 402 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சேஸிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. காயம் காரணமாக தர்விஷ் ரசூலியால் பேட்டிங் செய்ய முடியாததால், அணி 9 விக்கெட்டுகளை இழந்தது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team), இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தானை (IND vs AFG) 170 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. 2026 ஜூன் 17ம் தேதியான இன்று லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களில் 402 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சேஸிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. காயம் காரணமாக தர்விஷ் ரசூலியால் பேட்டிங் செய்ய முடியாததால், அணி 9 விக்கெட்டுகளை இழந்தது.
ALSO READ: முத்தரப்பு தொடர் பைனலில் இந்தியா ஏ.. வெளியேறியதா ஆப்கானிஸ்தான் ஏ?




பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி:
A clinical performance to seal the series! 🙌#TeamIndia register a massive 170-run victory in the 2nd ODI to take an unassailable 2-0 lead 👏
Updates ▶️ https://t.co/JYJ5l44iJ6#INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/vqLlFxbQyj
— BCCI (@BCCI) June 17, 2026
இந்திய அணிக்காக அபாரமாக பேட்டிங் செய்த கேப்டன் சுப்மன் கில், 110 பந்துகளில் 22 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அதிகபட்சமாக 154 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷனும் 79 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 125 ரன்கள் எடுத்தார். இந்த இரு வீரர்களின் அபாரமான ஆட்டத்தின் காரணமாகவே இந்திய அணி 400 ரன்களைக் கடந்தது.
கில் மற்றும் இஷான் தவிர, ரோஹித் சர்மா 48 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களும், குர்னூர் பிரார் 3 ரன்களும், அர்ஷ்தீப் சிங் 3 ரன்களும், பிரின்ஸ் யாதவ் 5 ரன்களும் மற்றும் குல்தீப் யாதவ் 3* ரன்களும் இந்தியாவுக்காக எடுத்தனர். கே.எல். ராகுல் டக் அவுட் ஆனார்.
400 டார்க்கெட்:
இலக்கைத் துரத்திய ஆப்கானிஸ்தான், அந்த பிரம்மாண்டமான ஸ்கோரால் முற்றிலும் நிலைகுலைந்து போனது. ரஹ்மத் ஷா 8 பவுண்டரிகளின் உதவியுடன் 89 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அணியின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். அர்ஷ்தீப் சிங் மற்றும் குர்னூர் பிரார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அறிமுக வீரர் பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் மீதமுள்ள 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ALSO READ: சம்பவம் செய்த ஸ்மிருதி, ஷபாலி.. நெதர்லாந்து அணிக்கு 210 ரன்கள் இலக்கு!
ஷாவைத் தவிர, ரஹ்மானுல்லா குர்பாஸ் 41 ரன், இப்ராஹிம் சத்ரான் 21, செடிகுல்லா அடல் 42, கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி 4, நஞ்செலியா கரோட்டி 6, ரஷித் கான் 12, கசன்பர் சமி 1, முகமது சலீம் 9, பிலால் 2 ரன்கள் எடுத்தனர். மேலும், ரிட்டையர்டு ஆன டார்விஷ் ரசூலி 6 ரன்கள் எடுத்தார்.