IND vs AFG 2nd ODI: கில் – இஷான் அதிரடி சதம்.. ஆப்கானிஸ்தானுக்கு அணிக்கு 403 ரன்கள் இலக்கு!
Gill - Ishan Century: இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று அதாவது 2026 ஜூன் 17ம் தேதி லக்னோ ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி மிகப்பெரிய டார்க்கெட்டை செட் செய்தது. கேப்டன் சுப்மன் கில் 110 பந்துகளில் 154 ரன்களும், இஷான் கிஷன் 79 பந்துகளில் 125 ரன்கள் எடுக்க, இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் 402 ரன்கள் குவித்தது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான (IND vs AFG) 2வது ஒருநாள் போட்டி இன்று அதாவது 2026 ஜூன் 17ம் தேதி லக்னோ ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி (Indian Cricket Team) மிகப்பெரிய டார்க்கெட்டை செட் செய்தது. கேப்டன் சுப்மன் கில் 110 பந்துகளில் 154 ரன்களும், இஷான் கிஷன் 79 பந்துகளில் 125 ரன்கள் எடுக்க, இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் 402 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் சார்பில், நங்கேலியா கரோட்டே அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ALSO READ: வயது மாற்றத்தால் 2 ஆண்டுகள் தடை.. தளறாத மனம்.. இந்திய அணிக்கு அறிமுகமான பிரின்ஸ் யாதவ் பாதை!




யஷஸ்வி ஏமாற்றம்:
டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த இந்தியா, இரண்டாவது ஓவரிலேயே தனது முதல் பின்னடைவைச் சந்தித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களில் முகமது சலீமின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். பின்னர் ரோஹித் ஷர்மாவும் சுப்மன் கில்லும் 2வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தனர். ஆனால், ரோஹித் தனது அரைசதத்தை எட்டுவதற்குச் சற்று முன்பே ஏமாற்றத்தை அளித்தார். அதாவது, ரோஹித் 39 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 48 ரன்கள் எடுத்து ரஷித் கான் பந்துவீச்சில் போல்டானார்.
பின்னர் கேப்டன் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் 3வது விக்கெட்டுக்கு 224 ரன்கள் சேர்த்தனர். சுப்மன் கில் தனது 9வது ஒருநாள் சதத்தையும், கேப்டனாக தனது முதல் சதத்தையும் அடித்தார். இஷான் கிஷனும் 79 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 14 பவுண்டரிகளின் உதவியுடன் 125 ரன்கள் எடுத்தார். அவர் நங்கேலியா கரோட்டின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
வரலாறு படைத்த கில்:
Innings Break!
A massive 4️⃣0️⃣2️⃣ runs on the board with centurions Shubman Gill and Ishan Kishan leading the way 💪
Our bowling innings coming up! ⌛️
Scorecard ▶️ https://t.co/JYJ5l44iJ6#TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/T5rJ0qHsqy
— BCCI (@BCCI) June 17, 2026
சுப்மன் கில் தனது 150 ரன்களை எட்டினார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் 150 ரன்களை எட்டிய 7வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இருப்பினும், கில் 110 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 22 பவுண்டரிகள் உட்பட 154 ரன்கள் எடுத்தார்.
ALSO READ: சேப்பாக்கத்தில் கடைசி ஒருநாள் போட்டி… ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா..?
இஷான் ஆட்டமிழந்தபோது, 36.3 ஓவர்களில் இந்தியா 320 ரன்கள் எடுத்திருந்தது. அங்கிருந்து இந்தியா 460-470 ரன்களை எட்டிவிடும் என்று தோன்றியது. ஆனால் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறிதளவு மீண்டெழுந்தனர். கரோட்டே, கே.எல். ராகுலை டக் அவுட் ஆக்கியதுடன், ஷ்ரேயாஸ் ஐயரையும் 24 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க செய்தார். தொடர்ந்து 49.5 ஓவர்களில் இந்திய அணி 402 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆட்டமிழந்தது.