IND vs AFG: சேப்பாக்கத்தில் கடைசி ஒருநாள் போட்டி… ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா..?
Rohit Sharma Farewell Date: ஜாம்பவான் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா கடந்த 2024ம் ஆண்டு டி20 வடிவப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து, 2025 மே 7ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் முழுமையாகக் களமிறங்கத் தயாராக உள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு (IND vs AFG) இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கடந்த 2026 ஜூன் 13 ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி லக்னோவில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், 3வது போட்டி சேப்பாக்கிலும் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா (Rohit Sharma) 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 48 ரன்கள் எடுத்து ரஷித் கான் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார். இதற்கிடையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், ஜாம்பவான் பேட்ஸ்மேனுமான ரோஹித் சர்மா ஓய்வு பெறுவது குறித்த ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வைரலான பதிவு உள்ளதா என்பதை தெரிந்து கொளோம்.
ALSO READ: மீண்டும் ரோஹித் சர்மாவை ரன் அவுட்டாகிய கில்.. ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன?




ஜாம்பவான் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா கடந்த 2024ம் ஆண்டு டி20 வடிவப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து, 2025 மே 7ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் முழுமையாகக் களமிறங்கத் தயாராக உள்ளார்.
ரோஹித் சர்மா விரைவில் ஓய்வா..?
🚨🚨ROHIT SHARMA IS GOING TO ANNOUNCE HIS RETIREMENT AFTER THE AFGANISTHAN SERIES
AB Cricinfo 🗣️: Days are numbered for Rohit Sharma. If he fails in 2 innings in this ongoing series, you won’t see him travelling with the team to England. It’s a do or die series for Rohit Sharma… pic.twitter.com/mUaLfHBEuC
— Oxygen (@Oxygen18_) June 16, 2026
இன்னும் 4 நாட்களில், அதாவது வருகின்ற 2026 ஜூன் 20ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியே ரோஹித் ஷர்மாவின் கடைசிப் போட்டியாக இருக்கலாம் என்று கூறும் ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இருப்பினும், பிசிசிஐ தரப்பிலிருந்தோ அல்லது ரோஹித் ஷர்மா தரப்பிலிருந்தோ இது போன்ற எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இதன்மூலம், வைரலாகப் பரவும் அந்த வீடியோவில் துளியும் உண்மை இல்லை. அது முற்றிலும் போலியானது.
ALSO READ: வயது மாற்றத்தால் 2 ஆண்டுகள் தடை.. தளறாத மனம்.. இந்திய அணிக்கு அறிமுகமான பிரின்ஸ் யாதவ் பாதை!
ரோஹித் ஷர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை;
ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 67 டெஸ்ட், 283 ஒருநாள் மற்றும் 159 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 116 டெஸ்ட் இன்னிங்ஸ்களில், ரோஹித் சர்மா 40.57 சராசரியில் 12 சதங்கள் மற்றும் 18 அரை சதங்களுடம் 4301 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர, 275 ஒருநாள் இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா 33 சதங்கள் மற்றும் 61 அரைசதங்கள் உதவியுடன் 11593 ரன்கள் எடுத்துள்ளார். இதனுடன் 151 டி20 சர்வதேச இன்னிங்ஸ்களில், ரோஹித் சர்மா 32.05 சராசரி மற்றும் 140.89 ஸ்டிரைக் ரேட்டுடன் 5 சதங்கள் மற்றும் 32 அரைசதங்கள் உதவியுடன் 4231 ரன்கள் எடுத்துள்ளார்.