Australia U19 Cricket: ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை ஆளும் இந்திய வம்சாவளி ஐரா ஏரி.. யார் இந்த வைரல் பேரழகி..?
Biography of Ira Aery: ஐரா ஏரி கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் பிறந்தார்; அங்கு கிரிக்கெட் விளையாட்டின் சூழலிலேயே வளர்ந்ததால், சிறுவயதிலிருந்தே இந்த விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக மாறினார். இதனை தொடர்ந்து, உள்ளூர் கிரிக்கெட் கிளப்புகள் மற்றும் பள்ளி அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.
ஆண்கள் கிரிக்கெட்டுடன் தற்போது மகளிர் கிரிக்கெட்டையும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் பார்வையிட்டு வருகின்றனர். மகளிர் கிரிக்கெட்டில் (Womens Cricket) ஒரு பெண்ணை பிடித்துவிட்டால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தலை மீது வைத்து கொண்டாடுவார்கள். அதற்கு ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) உள்ளிட்ட ஒரு சில வீராங்கனைகள் சாட்சி. இந்தநிலையில், தற்போது ஆஸ்திரேலிய இளையோர் கிரிக்கெட்டைச் சேர்ந்த ஒரு பேரழகி இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிக்காக விளையாடும் இந்திய வம்சாவளி இளம் கிரிக்கெட் வீராங்கனை ஐரா ஏரி, தனது அழகு மற்றும் ஆல்ரவுண்டு திறமையால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
ALSO READ: விப்ராஜ் செய்த தவறு.. இந்திய ஏ ஸ்கோர்போர்டில் கழிந்த 10 ரன்கள்..!
யார் இந்த ஐரா ஏரி..?
ஐரா ஏரி கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் பிறந்தார்; அங்கு கிரிக்கெட் விளையாட்டின் சூழலிலேயே வளர்ந்ததால், சிறுவயதிலிருந்தே இந்த விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக மாறினார். இதனை தொடர்ந்து, உள்ளூர் கிரிக்கெட் கிளப்புகள் மற்றும் பள்ளி அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். வலது கை பேட்ஸ்மேனாகவும், வலது கை வேக-நடுத்தர வேகப் பந்துவீச்சாளராகவும் (fast-medium bowler) தனது திறமைகளை வளர்த்துக்கொண்ட ஐரா ஏரி, தனது கிரிக்கெட் திறமையால் விரைவிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.




ஐரா ஏரியின் தனிப்பட்ட சாதனை:
ஐரா ஏரியின் கிரிக்கெட் பயணமானது, அவரது 15-வது வயதிலேயே ஆஸ்திரேலியாவின் 16 வயதுக்குட்பட்டோர் (Under-16) அணிக்காக அறிமுகமானபோது தொடங்கியது தொடர்ந்து, நியூசிலாந்து ‘ஏ’ (New Zealand A) அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ (Australia A) அணிக்காக தனது முதல்-தர (first-class) கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்டார். இந்தப் போட்டிகளில் ஐரா ஏரி வெளிப்படுத்திய திறமை, ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த இளம் திறமையாளர்களில் ஒருவராக அவரது இடத்தைத் உறுதிப்படுத்தியது.
ALSO READ: 40 வயதில் ஸ்பெயினுக்கு எதிரான நங்கூரம்.. ஒரே நாளில் ஹீரோவான கேப் வெர்டே கோல் கீப்பர்!
ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களிடையே ஐரா ஏரியின் (Ira Aery) பங்களிப்பு ஏற்கனவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இளம் வயதிலேயே அவர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்திறன், பல ஆர்வமுள்ள வீரர்களுக்கு, குறிப்பாக வேகப்பந்து வீச்சுத் துறையில் உள்ளவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. அபாரமான திறமை கொண்ட ஒரு புதிய வீரராக, விளையாட்டில் ஒரு வீரராகவும் தலைவராகவும் தன்னை மெருகேற்றிக்கொண்டு வரும் ஐராவின் கிரிக்கெட் எதிர்காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிரான விறுவிறுப்பான சமீபத்திய போட்டியில் ஐரா ஏரி வெறும் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, எதிரணியை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார். தற்போது, ஆஸ்திரேலிய தேசிய தேர்வாளர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐரா ஏரியின் ஆட்டத்தையும் அவரது தலைமைப் பண்புகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால், விரைவில் ஆஸ்திரேலிய சீனியர் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.